India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

SSC ல் கான்ஸ்டபிள் பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 7,565 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு 12th பாஸ் போதும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.69,000 சம்பளம் வழங்கப்படும். 18- 25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.21க்குள் இங்கே <

தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (அக்-02) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே செல்லும் பொதுமக்கள் கொஞ்சம் அலெர்ட்டாக இருங்க மக்களே!

சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் ஒழுகூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (செப் 30) நடைபெற்றது. நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை அட்டைகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சந்திரகலா,மருத்துவ பணிகள் இணை இயக்குனர் தீர்த்தலிங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், மாவட்ட கண்காணிப்பாளர் அய்மான் ஜமால் பரிந்துரையின் பேரில், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலியல் வழக்கில் (POSCO) தொடர்புடைய செந்திலநாதன் என்பவர் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். குற்றங்களைத் தடுக்கவும் சட்டம்-ஒழுங்கைப் பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (செப் 30) அன்று இரவு பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்காக கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், <

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானகடைகளும் மூடி வைக்க வேண்டும், மேலும் பார்கள் அனைத்தும் மூட வேண்டும் இல்லாவிட்டால் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று செப்டம்பர் 30 ம் தேதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட சோளிங்கரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில் உள்ளது. இறைவன் 24 நிமிடங்களுக்குள் அவதரித்ததால், இந்த மலையில் 24 நிமிடம் பிரார்த்தனை செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்த தம்பதிகளுக்கு ஷேர் பண்ணுங்க.

ராணிப்பேட்டை மக்களே, நாளை விஜயதசமி உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் முன், தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு விதிக்கபட்ட கட்டண விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கும் மேலாக வசூலித்தால், 044-28251688 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ராணிப்பேட்டை தனியார் பள்ளி கட்டணம் முழுப் பட்டியலுக்கு இங்கே <

ராணிப்பேட்டை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Sorry, no posts matched your criteria.