India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (நவ.2) இரவு 10 மணி முதல் நாளை (நவ.3) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட போலீசார், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்ட இருவரை, இன்று (நவ.2) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் கோபி (25) மற்றும் நிவாஸ் (24) மீது மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<

ராணிப்பேட்டை மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை (நவ.3) தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிகிறார். இதில் அரசு சார்பில் 23,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். தொடர்ந்து ராணிப்பேட்டையில் காமராஜர் தங்கியிருந்த நினைவு இல்லத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும், தனியார் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைக்க உள்ளார். அந்த அரங்கத்தை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.

ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனத்தில் (ஐ.ஆர்.சி.டி.சி.,) காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளது. விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பிரிவில் மொத்தம் 64 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு,கல்வித்தகுதி பி.எஸ்சி.,/ பி.பி.ஏ.,/ எம்.பி.ஏ ஆகிய பட்டம் பெற்று இருக்கவேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. சி.ஐ.டி வளாகம், தரமணி நவ.15 தேதி நேர்காணல் நடைபெறுகின்றது.

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<

நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம் அருகே அத்திபட்டு கிராமத்தில் நேற்று (நவ.1) கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா கலந்து கொண்டு கிராம மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என ஆட்சியர் உறுதி அளித்தார்.
Sorry, no posts matched your criteria.