Ranipet

News October 3, 2025

ராணிப்பேட்டை: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

ரணிப்பேட்டை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News October 3, 2025

ராணிப்பேட்டை: மக்களே உஷார் !

image

ராணிப்பேட்டை மாவட்டம் காவல்துறை சார்பில் தனது வலைதளப் பக்கத்தில் ஒரு விழிப்புணர்வு செய்தியை பதிவு செய்துள்ளது. அதனபடி ”நீங்கள் டிஜிடல் கைது க்கு பலியாகலாம்…? ”நான் காவல்துறையிலிருந்து அழைக்கிறேன். உங்கள் பார்சல் கைப்பற்றப்பட்டது. அதில் போதைப் பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தோம்” இப்படியெல்லாம் அழைப்பில் பேசினால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை உடனே உங்கள் பகுதி போலீசாரிடம் புகார் அளிக்கலாம்.

News October 3, 2025

ராணிப்பேட்டை: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க.

News October 3, 2025

ராணிப்பேட்டை: எந்த பதவியில் யார் தெரியுமா…?

image

1.மாவட்ட ஆட்சித் தலைவா்- J.U.சந்திரகலா
2.காவல் துறை கண்காணிப்பாளர்- அய்மான் ஜமால்
3.மாவட்ட வருவாய் அலுவலர்- S.தனலிங்கம்
4.திட்ட இயக்குனர்(ஊரக வளர்ச்சி முகமை)- Er.N.S.சரண்யா தேவி
5.ஆட்சியரின் நேர்முக உதவியாளர் – க.ஏகாம்பரம்
6.கோட்ட வருவாய் அலுவலர் இராணிப்பேட்டை- K.ராஜி
7.கோட்ட வருவாய் அலுவலர் அரக்கோணம்- வெங்கடேசன்
8.உ ஆ (கலால்),இராணிப்பேட்டை-ராஜ்குமார
9.மாவட்ட வழங்கல் அலுவலா்- க.ஏகாம்பரம்
ஷேர்

News October 3, 2025

ராணிப்பேட்டை: ரேஷன் கார்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, ராணிப்பேட்டை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க…

News October 3, 2025

ராணிப்பேட்டை: லிப்டில் பணம், நகை திருடிய பெண்கள்

image

சென்னை ஆவடியை சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்பவர் அரக்கோணத்திற்கு ரயிலில் வந்து லிப்டில் வெளியே செல்ல சென்றார். அப்போது அவரது பையில் வைத்திருந்த ரூபாய் 60 ஆயிரம் ரொக்கம் , ஒன்றை சவரன் நகை திருடு போனது. இதனையடுத்து அவர் அரக்கோணம் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார், புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அக்டோபர் 2 ம் தேதி மதுரை வண்டியூரை சேர்ந்த அனிதா (48), பிரியா (38) ஆகிய இருவரை கைது செய்தனர்.

News October 3, 2025

ராணிப்பேட்டை: குட்கா விற்பனையில் ஒருவர் கைது

image

அரக்கோணம் டவுன் போலீசார் நேற்று அக்டோபர் 2ம் தேதி கீழ்குப்பம் மூகாம்பிகை நகர் பகுதியில் உள்ள பங்க் கடையில் ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தினர். இதில் பங்க் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் . இது தொடர்பாக பங்க் கடை உரிமையாளரான கோடீஸ்வரனை (44) போலீசார் கைது செய்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்தனர்.

News October 3, 2025

ராணிப்பேட்டை: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த <>லிங்கில் <<>>கிளிக் செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க.

News October 3, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.2) 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் தொடர்புக்கு 100 ஐ அழைக்கலாம்.

News October 2, 2025

ராணிப்பேட்டை: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <> இணையதளம்<<>> மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!