Ranipet

News October 5, 2025

ராணிப்பேட்டை பெண்களே.. இலவச தையல் மிஷின் வேணுமா?

image

ராணிப்பேட்டை பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் மிஷின் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.

News October 5, 2025

ராணிப்பேட்டை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

News October 5, 2025

ராணிப்பேட்டை: சத்துணவுப் பிரிவில் Computer Operator வேலை!

image

ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் சத்துணவுப் பிரிவில் காலியாக உள்ள கணினி அனுபவத்துடன் கூடிய உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை கல்விச் சான்றுகளுடன் அக்.6-10 வரை நேரிலோ, தபாலிலோ சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தல் வேண்டும். ரூ.14ஆயிரம் சம்பளம் வழங்கப்பட இருக்கிறது, நண்பர்களுக்கு ஷேர்.

News October 5, 2025

ராணிப்பேட்டை: நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது

image

அரக்கோணத்திற்கு சென்னை ஆவடியைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி அக்.1-ஆம் தேதி நகை வாங்க வந்துள்ளார். அப்போது மின்சார ரயிலில் இருந்து இறங்கும்போது மர்ம நபர்கள் அவரின் பையை பறித்தனர். பையில் ரூ.60,000 பணம் & 12 கிராம் நகை இருந்தது. ராஜராஜேஸ்வரி கூச்சலிடவே, பொதுமக்கள் உதவியுடன் மதுரையைச் சேர்ந்த அனிதா, பிரியா ஆகிய 2பெண்கள் பிடிபட்டு, ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் 2 பெண்களை தேடி வருகின்றனர்.

News October 5, 2025

ராணிப்பேட்டை: ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்!

image

ராணிப்பேட்டை மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!

News October 5, 2025

ராணிப்பேட்டை: கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் அறிவிப்பு

image

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ அருண் தலைமையில் ஆய்வுக் கூட்டம் வரும் அக்.10ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில் சிறுபான்மையின சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம். அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து இந்த ஆய்வு கூட்டத்தில் ஆலோசிக்கலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News October 5, 2025

வாலாஜா: இலவச கண் பரிசோதனை முகாம்

image

வாலாஜா ரஃபி நகர் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நல சங்கம் மற்றும் EYERSTED இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நாளை (அக் -05) காலை 9 மணி முதல் 4:00 மணி வரை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் வளாகத்தில் நடைபெற உள்ளது. கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் கண் பரிசோதனை கருவி மூலம் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்படுகிறது. சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.

News October 5, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-04) இரவு 10 மணி முதல் காலை 6 (அக்.5) மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 4, 2025

ராணிப்பேட்டை : வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 4, 2025

ராணிப்பேட்டை: பெண்களின் பிரசவ வழிபாட்டு தலம்

image

பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், சுகப் பிரசவம் நடைபெற வேண்டியும் வழிபடும் முக்கிய கோயில்களில் தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில் முக்கியமானது. இக்கோயிலில், அம்பாளுக்கு பதிலாக தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். பெண்களின் கர்ப்ப கால பிரச்சனைகளை தீர்த்து வைப்பவர் என்பது பக்தர்கள் நம்பிக்கை. பொதுவாக நேராக அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி இங்கு தலையை ஒரு புறமாக சாய்த்த நிலையில் காட்சி தருகிறார். ஷேர்

error: Content is protected !!