Ranipet

News October 8, 2025

பேருந்து நிழற்கூடத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

ஆற்காடு ஊராட்சி அக்.7 ஒன்றியம் கிளாம்பாடி ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிழற்கூடத்தினை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரண்யா தேவி,செயற்பொறியாளர் செந்தில்குமார்,வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News October 8, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-07) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 7, 2025

ராணிப்பேட்டை : ஹோட்டலில் தரமற்ற உணவா? தயங்காம சொல்லுங்க!

image

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீப காலமாக உணவில் தேரை, பல்லி, பாம்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 7, 2025

ராணிப்பேட்டை: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க

1. UMANG – ஆதார்,கேஸ் முன்பதிவு,PF

2. AIS -வருமானவரித்துறை சேவை

3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்

4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை

5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை

6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்

இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News October 7, 2025

ராணிப்பேட்டை: தனியார் பள்ளியில் இலவச சேர்க்கை

image

ராணிப்பேட்டை மக்களே RTE 2025 – 2026 இன்று முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. LKG முதல் 8ம் வகுப்பு வரை உங்க குழந்தைகள் தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் இல்லாமல் படிக்கலாம். விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யுங்க. ஆவணங்கள்: பிறப்பு , சாதி சான்றிதழ், ஆதார், புகைப்படம் பதிவு செய்ய வேண்டும்.. (அட்மிஷன் தொடங்கவும் விண்ணப்பியுங்க..) இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க…

News October 7, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் POCSO சட்ட விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் POCSO சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (07.10.2025) நடைபெற்றது. 18 வயதுக்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பது மற்றும் குழந்தைகள் சம்பந்தமான உதவி எண்கள் 1098 மற்றும் 181 பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. போலீசார் மற்றும் Childline அதிகாரிகள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News October 7, 2025

ராணிப்பேட்டை: செல் போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ)<> இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் & உங்களின் தகவல்களை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்படும். பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் 5 லட்சம் மொபைல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 7, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11-ந் தேதி கிராம சபை கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று நடத்துவது நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது அக் 11-ந் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 11 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என அனைத்துக் கிராம ஊராட்சி தலைவர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News October 7, 2025

ராணிப்பேட்டை: வங்கியில் 94,000 வரை சம்பளத்தில் வேலை

image

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் & சிந்து வங்கியில் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 190 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 23 வயதுக்கு மேல் இருந்து எதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் 64,000 முதல் 94,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் அக்-10 குள் இந்த<> லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர்.

News October 7, 2025

ராணிப்பேட்டை: 5 வீடுகளை திறந்து வைத்த அமைச்சர் காந்தி

image

பாணாவரம் நரிக்குறவர் காலனியில் தலா ரூபாய் 5.7 லட்சம் மதிப்பீட்டில் 5 புதிய வீடுகள் கட்டப்பட்டது. இந்த 5 வீடுகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று அக்டோபர் 6-ம் தேதி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கைத்தறித்துறை அமைச்சர் காந்தி கலந்துகொண்டு வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார். விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!