Ranipet

News April 15, 2025

பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

image

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

News April 15, 2025

பைக்குகள் மோதல்; 3 இளைஞர்கள் உயிரிழப்பு

image

நெமிலியை அடுத்த கீழ்வெங்கடாபுரத்தை சேர்ந்த வெற்றிவேல் மற்றும் பிரியகுமார் ஆகியோர் சென்ற பைக்கும் சேந்தமங்கலத்தில் இருந்து தினேஷ் மற்றும் ரஞ்சித் ஆகியோர் சென்ற பைக்கும் ஆலப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பலத்த காயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெற்றிவேல், தினேஷ், பிரியகுமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

News April 14, 2025

இரவு ரோந்து பணி: போலீசார் விவரம் வெளியீடு…!

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், காவல் துறை சார்பில் 14.04.2025 அன்று இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோந்து பணிக்காக  1 முதல் 5 வரை மொத்தமாக 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் ஓர் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பொறுப்பாக உள்ளனர்.

News April 14, 2025

விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

image

மத்திய மற்றும் மாநில அரசினுடைய நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கென தனி அடையாள எண் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான காலக்கெடு நாளையோடு(15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். ஷேர் பண்ணுங்க

News April 14, 2025

ராணிப்பேட்டை: பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பிகலாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்படும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை  சமர்பித்திட கடைசி நாள் 20.04.2025 மாலை 5.00 மணி ஆகும். இதற்கான நேர்முகத் தேர்வு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில்  வரும் 25ஆம் தேதி நடைபெறும்.

News April 13, 2025

தமிழ் புத்தாண்டு- இரத்னகிரி முருகன் கோயில் போங்க

image

இராணிப்பேட்டை ரத்தினகிரி மலையில் உள்ள பாலமுருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News April 13, 2025

ராணிப்பேட்டை காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி

image

ராணிப்பேட்டை காவல்துறை இன்று  சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் அங்கீகரிக்கப்படாத டிரேடிங் செயலியை பதிவிறக்கம் செய்து பண மோசடிக்கு உள்ளாகாதீர்கள் எனவும் அங்கீகரிக்கப்படாத  டிரேடிங் மூலம் முதலீடு செய்யும் பணத்திற்கு, இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்று குறுஞ்செய்தியில் வரும் லிங்கை நம்பி கிளிக் செய்ய  வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News April 13, 2025

ஐடிஐ முடித்திருந்தால் போதும் ரயில்வேயில் வேலை

image

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 30 வயது வரை. கல்வித்தகுதி – 10ஆம் வகுப்பு, ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பொறியியல் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

ஆற்காட்டில் ரூ 35 கோடி மதிப்பில் புறவழி சாலை

image

ஆற்காட்டில் ரூ.35 கோடியில் புறவழிச்சாலை (பைபாஸ்) அமைக்கும் பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புதிதாக 3.46 கிமீ தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நபாா்டு மற்றும் கிராம சாலை துறை சாா்பில் ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டது. சாலைப் பணிகள் தொடக்க விழா வேப்பூா் ஊராட்சி பொன்னியம்மன் கோயில் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

News April 13, 2025

இரு பைக்குகள் மோதி விபத்து – வாலிபர் உயிரிழப்பு

image

வேடல் கிராமம் பெரியார் நகரில் அரக்கோணம் – சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் நேற்று இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இறந்தவர் யார் என அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!