India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

ராணிப்பேட்டை மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்பினால் கடை திறந்திருக்கும் விவரம் உங்களுக்கு மெசேஜாக வரும். மேலும், உங்கள் பகுதி ரேஷன் கடையில் உள்ள ஸ்டாக் பற்றி தெரிந்துகொள்ள PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!

அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள தாழ்வுநிலை மண்டலத்தால், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று (அக்.-9) ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட் இருப்பதால் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதில் மழை இருக்கா? சொல்லுங்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.08) இரவு முதல் இன்று (அக்.09) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

அரக்கோணம் காலிவாரி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் 44 இவர் கொலை முயற்சி வழக்கில் அரக்கோணம் டவுன் போலீசாரால் நேற்று அக்.08 கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன்ஜமால் ஆட்சியர் சந்திரகலாவுக்கு பரிந்துரை செய்தார் அதனை ஏற்று ஆட்சியர் சந்திரகலா, குற்றவாளி வடிவேலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

கொண்டாகுப்பம் ஊராட்சியில் இன்று (அக்.08) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இக்கூட்டமானது மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து, ஆதார் எண், மொபைல் எண், OTP எண்ணை பதிவிட்டு கண்டுபிடிக்கலாம். 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இ-சேவை மையங்களில் நேரடியாகவும் சென்று கேட்கலாம். ஷேர் செய்யுங்கள்

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் இன்று (8.10.2025) பொதுமக்கள் இணையத்தில் பாதுகாப்பாக இருப்பதற்காக கடவுச்சொல் உருவாக்கும் போது பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பல கணக்குகளுக்கு ஒரே கடவுச்சொல் பயன்படுத்தாமல், எழுத்துக்கள், எண்கள் மற்றும் சின்னங்களுடன் வலுவான கடவுச்சொல் அமைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மக்களே, இந்தியன் வங்கியில் Manager, Senior Manager பணியிடங்களுக்கு 171 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 23 வயதுக்கு மேற்பட்ட டிகிரி முடித்த நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,000 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் அக்டோபர்-13-க்குள் இந்த <
Sorry, no posts matched your criteria.