Ranipet

News September 29, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.

News September 29, 2024

ராணிப்பேட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டம்

image

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் கும்மினிப்பேட்டையில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும் அரக்கோணம் எம்.எல்.ஏ சு.ரவி கலந்துகொண்டு பேசினார். மாவட்ட அவைத் தலைவர் சம்பத், நகர செயலாளர் பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளர்கள் விஜயன், பழனி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News September 29, 2024

ராணிப்பேட்டை பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பெண்கள் பாதுகாப்பு குறித்து இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெண்கள் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில், ஆபத்தான நேரத்தில் காவல்துறையை எளிதாகவும், விரைவாகவும் தொடர்பு கொள்ளும் விதத்தில் சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள காவல் உதவி செயலியை Play store-ல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு தெரிவித்துள்ளது.

News September 29, 2024

ராணிப்பேட்டை அருகே ரயிலில் பாய்ந்து கணவர் தற்கொலை?

image

அரக்கோணம் அருகே கவால் பேட்டை காந்தி ரோட்டில் வசித்து வந்தவர் விஜயன்.மருந்து கடை நடத்தி வந்தார். கடந்த 7-ஆம் தேதி இவரது மனைவி மீனாட்சி, மகள் பவித்ரா, மகன் யுவனேஷ் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.தலைமறைவான விஜயனை தனிப்படை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இஞ்சிப்புத்தூர் ரயில்நிலையம் அருகே விஜயன் இறந்து கிடந்தார்.அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

News September 29, 2024

ராணிப்பேட்டை அருகே வேலைவாய்ப்பு முகாம்

image

வாலாஜாவில் உள்ள மாஸ் திருமண மண்டபத்தில்இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. சுங்கவாசத்திரத்தில் புதிதாக அமைந்துள்ள MNC நிறுவனத்திற்கு ஆண் பெண் இருபாலருக்கும் நேரடியான நேர்முக தேர்வு நடைபெறுகிறது. கல்வித் தகுதி 10 வகுப்பு முதல் பட்டதாரி வரை முகாமில் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் பொழுது தங்களுடைய ஆதார் கார்டு சான்றிதழ்கள் கொண்டு வரவேண்டும்.

News September 28, 2024

ராணிப்பேட்டையில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (28.9.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் 9884098100 எண்ணிற்கும் அழைக்கலாம்.

News September 28, 2024

அரக்கோணம் கடற்படை தளத்தில் விமான பயிற்சி சாகசம்

image

அக்டோபர் 6 விமானப்படை தினத்தை முன்னிட்டு அரக்கோணம் கடற்படை தளத்தில் விமான சாகச பயிற்சி நடைபெற்று வருகின்றன. இந்திய விமானப்படை துணைத் தளபதி பிரேம்குமார் பேசுகையில், 92வது விமானப்படை தினத்தையொட்டி, சென்னையில் மெரினாவில் விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதனால் அரக்கோணம் கடற்படைத்தளத்தில் விமான சாகச பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

News September 28, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.

News September 28, 2024

அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

image

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்குவது, கழக வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்கள் நலப்பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து செயல்வீரர்கள், செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் செப்.29 தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேப்பூரில் மணி திருமண மண்டபத்திலும், அம்மூரில் VKM மினி ஹாலிலும், ராணிப்பேட்டையில் NRK திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News September 28, 2024

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்

image

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் 470 ஏக்கரில் பரப்பளவில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் டாட்டா மோட்டார்ஸ் தொழில் நிறுவனம் அமைப்பதற்கான பணியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், DRB.ராஜா, ஆர் காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரப்பன் முனிரத்தினம் பலர் உள்ளனர்