India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கி விற்பனை துவங்கியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 கடைகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (30.9.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
காந்திஜெயந்தி கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி வாரியாக மாற்றுத்திறனாளிகளின் கணக்கெடுப்பு பட்டியல் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் அந்தந்த ஊராட்சித் தலைவர்/எழுத்தர்கள் மூலமாக தங்களை விவரங்கள் கணக்கெடுப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளுமாறும், விடுபட்டிருந்தால் பஞ்சாயத்து எழுத்தர்கள் மூலமாக இணையதள முகவரி மூலம் பதிவு செய்யுமாறு ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின் டாஸ்மார்க் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஓட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உணவகங்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று மூடி வைக்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு மற்றும் குரூப் 2 தேர்விற்கான பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் https://forms.gle/U6jezR4ErRVZ1t1x8 மற்றும் https://forms.gle/iBtC9MyGSB1NfnZH8 ஆகிய Link-ல் Google form -ஐ பூர்த்தி செய்ய இன்றே கடைசி நாள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரக்கோணம் எம்எல்ஏ ரவி இன்று விடுத்துள்ள அறிக்கையில், பனப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்கா திட்டம் 2014 அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது . இந்த திட்டத்தில் நிலம் கொடுத்தவர்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் .அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டத்தை திமுக கொண்டு வந்தது போல் சொல்லிக் கொள்கின்றனர் என்று எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 3ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் களபிரச்சனைகளை களைத்திட கூட்டத்தில் கலந்துகொண்டு பொது பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 3ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் களபிரச்சனைகளை களைத்திட கூட்டத்தில் கலந்துகொண்டு பொது பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (29.9.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.
Sorry, no posts matched your criteria.