India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை சிசிடிவி கேமராக்கள் சில நிமிடங்கள் செயல் இழந்தன. இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் வாலாஜா அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நல்ல முறையில் இயங்குகிறதா என்று ஆட்சியர் வளர்மதி இன்று பார்வையிட்டார்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாலாஜா அரசு மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 4 ம்தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தேர்தல் வட்டாட்சியர் ஜெயக்குமார் உடன் இருந்தார்.

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும். குறிப்பாக ஸ்டார் ஹோட்டல்கள், பார்கள் மூடி வைக்கப்படும். சட்டவிரோதமாக திறந்து வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பிரதம மந்திரியின் இலவச மடிக்கணினி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தங்கள் கைபேசியில் போலியாக வரும் Link-யை நம்பி அதிலுள்ள இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம்! என்றும் அந்த செய்தியின் உண்மை தன்மையை அறியாமல் மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம் என ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். திட்ட இயக்குநர் லோகநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சுதா, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பற்குணம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா, டி.சி.குப்பத்தை சேர்ந்தவர் சத்யா. முன்னாள் ராணுவ வீரரான இவர் குடும்பத்துடன் நத்தம் மலைப்பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோயிலுக்கு நேற்று(ஏப்.28) சென்றுள்ளார். அப்போது சத்யாவின் மூத்த மகன் ஹர்ஷன் (14) திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை டோலி கட்டி மருத்துவமனை கொண்டு வந்த நிலையில், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மூச்சு திணறலால் இறந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக திருப்பதி செல்லும் விரைவு மற்றும் மின்சார ரயில்களில் அரிசி கடத்தப்படுவதாக ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று(ஏப்.28) ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அரக்கோணத்தில் இருந்து கடப்பா செல்லும் மின்சார ரயிலில் சோதனை நடத்தி, ரயில்களின் சீட்டுக்கு கீழே பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14-வயது உட்பட்டோருக்கான மாநிலங்கள் இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்களுக்கான சிறப்பு தேர்வு முகாம் வரும் மே 1ஆம் தேதி காலை 8 மணி அளவில் ராணிப்பேட்டை பாரி மைதானத்தில் நடைபெற உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சந்தோஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர், திருத்தணி பெரியார் நகர் பால்வாடி தெருவை சேர்ந்தவர் ராமு(38). இவர் அரக்கோணம் பழனிபேட்டையில் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் செல்போனில் ஆன்லைன் ரம்மி ஆடியதில் பல லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்த நிலையில், இன்று விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரக்கோணம் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாலாஜா AAA கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மையத்திலிருந்து சுமார் 3கி மீ சுற்றளவு வரை ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் வாக்கு எண்ணும் நாட்கள் (04.06.2024) வரை பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.