Ranipet

News May 1, 2024

அரக்கோணம் அருகே ரயில் மீது கல்வீச்சு

image

தானாபூரிலிருந்து பெரம்பூர், அரக்கோணம் வழியாக பெங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று(ஏப்.30) இரவு அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஏ-2 ஏசி கோச் கழிவறை கண்ணாடி மீது கல் வீசப்பட்டது. இதுகுறித்து கழிவறைக்கு சென்ற பயணி ஒருவர் டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தார். அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

News May 1, 2024

ராணிப்பேட்டை: கோடைகால பயிற்சி முகாம் தொடக்கம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நேற்று(ஏப்.30) தொடங்கியது. ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தடகளப் போட்டிக்கு பயிற்சி, வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குத்துச்சண்டை பயிற்சி மற்றும் கையுந்து பந்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில் மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.

News May 1, 2024

நடுரோட்டில் தீ பற்றி எரிந்த கார்

image

திருத்தணி மிட்டக்கண்டிகையைச் சேர்ந்தவர் ரகுகுமார். இவர் தனது உறவினர் ராமதாஸ் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அரக்கோணம் காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலை பள்ளூர் பருவமேடு அருகே இன்று மாலை செல்லும் போது காரில் இருந்து புகை வந்ததால் இருவரும் கீழே இறங்கினர். அடுத்த சில நொடிகளில் கார் தீ பற்றி எரிந்தது.

News May 1, 2024

விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் மாணவியர் சேர்வதற்கான தேர்வுக்கு தகுதியான மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 95140-00777 என்ற எண்ணிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் நேரிலும் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் மாணவியர் சேர்வதற்கான தேர்வுக்கு தகுதியான மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 95140- 00777 என்ற எண்ணிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேரிலும் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

News April 30, 2024

ராணிப்பேட்டை காஞ்சனகிரி மலையின் அழகு!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களின் ஊட்டி, கொடைக்கானலாக உள்ளது காஞ்சனகிரி மலை. இதில் சிறிய மற்றும் பெரிய அளவில் இரண்டு மலைகள் உள்ளது. இதில் ரத்னகிரி பாலமுருகன் கோவிலும், காஞ்சனேஸ்வரர் சிவன் கோவிலும் உள்ளது. மலையை சுற்றிலும் ஆங்கங்கு காவல் தெய்வங்களும் உள்ளன. அழகிய அமைதியான இடத்தில் நேரம் செலவிடுவதற்கு இவ்விடம் சிறந்தது.

News April 30, 2024

அரக்கோணம்: பைக்குகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் காயம்

image

அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமம் மின்னல் பங்களா என்ற இடத்தில் இன்று(ஏப்.30) காலை 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஆனந்தன், சேட்டு ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 30, 2024

அரக்கோணம் அருகே 2 ஜோடிகளுக்கு திருமணம்

image

அரக்கோணத்தில் தனியார் அமைப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் ஏழை ஜோடிகளான சக்திவேல் – சங்கவி, தர்மன் – ரேவதி ஆகிய இரு ஜோடிகளுக்கு நேற்று(ஏப்.29) மாலை அரக்கோணம் ஜவகர் நகரில் உள்ள அருள் குழந்தைகள் இல்லத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணத்தில் மும்மதத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

News April 29, 2024

ரயில்கள் 2 மணி நேரம் காலதாமதம்

image

பெங்களூரில் இருந்து காட்பாடி-அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், ஆலப்புழாவிலிருந்து டாட்டா நகர் செல்லும் தன்பாத், சேலத்திலிருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை 2 மணி நேரம் காலதாமதம் ஆனது. இதேபோல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் 40 நிமிடங்கள் காலதாமதமாக வருகிறது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

error: Content is protected !!