Ranipet

News May 4, 2024

நெமிலி: மாமியார் உட்பட 3 பேருக்கு கத்திக்குத்து

image

நெமிலி தாலுகா நாகவேடு கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா. இவரது மருமகன் மதன். இவர்களுக்கிடையே நேற்று(மே 3) இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது சுசிலாவை மதன் கத்தியால் குத்தியுள்ளார். தடுக்க வந்த அதே ஊரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் சுசீலாவின் இன்னொரு மகளான ரோஜா ஆகியோரையும் மதன் குத்தியுள்ளார். மதனை கிராம மக்கள் பிடித்து கட்டிப்போட்டு, காயமடைந்த 3 பேரையும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

News May 3, 2024

போலி மருத்துவர்கள் குறித்து தெரிவிக்கலாம்

image

ராணிப்பேட்டை, சத்திரம் புதூர் பகுதியில் போலியாக மருத்துவம் பார்த்த திவ்யா என்ற பெண் இன்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் போலியாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்தால் அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி இன்று தெரிவித்துள்ளார்.

News May 3, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் ராணிப்பேட்டை மாவட்ட, தாலுகா வாரி பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள்9642422022 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

News May 3, 2024

அரக்கோணம்: பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் படுகாயம்

image

அரக்கோணம், பரமேஸ்வரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேரன்(22). இவர் நேற்று(மே 2) இரவு தக்கோலத்தில் இருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தக்கோலம் கூட்ரோடு அருகில் செல்லும்போது நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தக்கோலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 2, 2024

தேர்வு எழுதாத மாணவர்களை தேர்வு எழுத நடவடிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற +2 தேர்வில் 150 மாணவ, மாணவிகளும், 10ம் வகுப்பு பொதுதேர்வில் 123 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதவில்லை. அதன்படி மொத்தம் 273 மாணவ, மாணவிகளையும் முதன்மை கல்வி அலுவலர் உஷா மேற்பார்வையில் பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு துணை தேர்வு எழுத வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News May 2, 2024

போலி மருத்துவர் கைது; கிளினிக்கிற்கு சீல்

image

சோளிங்கர் தாலுகா ஒழுகூர் கிராமம் பிராமணர் தெருவை சேர்ந்தவர் ஜெயவேலு. இவர் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். முறையாக எம்பிபிஎஸ் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த நிலையில் இன்று மருத்துவ குழுவினர் வாலாஜா சப்-இன்ஸ்பெக்டர் துணையுடன் அவரை கைது செய்தனர். மேலும் கிளினிக்கில் இருந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

News May 2, 2024

மலைக் கோயிலுக்கு சென்றவர் மரணம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பெங்களூருவை சேர்ந்த முத்துக்குமார்(47 ) என்பவர் நேற்று (மே 1) படிக்கட்டில் ஏறி சென்று கொண்டிருந்தார். 1200வது படிக்கட்டு ஏறி செல்லும்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News May 2, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று (மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 2, 2024

சோளிங்கரில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்

image

சோளிங்கரில் சி.எம்.அண்ணாமலை பில்டர்ஸ் சார்பில் நிறுவனர் தமிழரசன் தலைமையில் உழைப்பாளர் தினம் நேற்று(மே 1) கொண்டாடப்பட்டது. திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் காந்தி, சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் கலந்து கொண்டனர். மாவட்ட து.செயலாளர் சிவானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News May 1, 2024

திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள திமுக தலைமை அலுவலகம் அருகே ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் ஆர்.வினோத் காந்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டார்.

error: Content is protected !!