India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு பசுமை விருது சாம்பியன் தேர்வு தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பசுமை விருது சாம்பியன் வழங்குவது குறித்த கருத்துக்களை ஆட்சியர் வழங்கினார்.

கலவை, இருங்கூர் கிராமம் ரோடு தெருவை சேர்ந்தவர் சந்திரன், சுசிலா தம்பதியர். இவர்களது வீட்டின் பின்பக்க கதவை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து சுசிலா வாழைப்பந்தல் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி நேற்று அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

வாலாஜா, சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் பெண் ஒருவர். இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அப்பெண் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார் இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை அரசு ஐடிஐயில் ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்; இங்கு எலக்ட்ரீசியன், ஃபிட்டர் மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் ஓராண்டு மற்றும் இராண்டு வகுப்புகள் உள்ளன. 14 முதல் 40 வயது உடையவர்கள் மே 10 முதல் ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9499055681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

வாலாஜா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக திருடு போன மற்றும் தொலைந்து போன 30 செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ராணிப்பேட்டை எஸ் பி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் எஸ்பி கிரண் ஸ்ருதி கலந்துகொண்டு செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

நெமிலி, பனப்பாக்கத்தில் இருந்து பன்னியூர் செல்லும் சாலையில் பெருவளையம் என்ற கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் உள்ள பனைமரம் ஒன்று இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து வருவாய்த் துறையினர் அரக்கோணம் தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். பனைமரம் எப்படி தீப்பற்றி எரிந்தது என நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தனியார் பள்ளிகளில் பஸ் மற்றும் வேன்களில் மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். வாகனங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு ஆண்டு தணிக்கை இன்று ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் வளர்மதி கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 84.97% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 77.49 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 90.58 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.14) வெளியாகியுள்ளன. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவர்கள் 83.39% பேரும், மாணவியர் 91.84% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 87.86% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் 30வது இடத்தை பிடித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.