Ranipet

News March 3, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.

News March 3, 2025

மாணவர்கள் தேர்வு எழுதுவதை பார்வையிட்ட ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் இன்று காவேரிப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு தேர்வினை மாணவ, மாணவிகள் எழுதுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி இருந்தார்.

News March 3, 2025

போஸ்ட் ஆபிசில் வேலை; இன்றே கடைசி நாள்

image

சென்னை. செங்கல்பட்டில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.62 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். இன்றைக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும்

News March 3, 2025

அரசு பொதுத்தேர்வு மாணவர்களை கண்காணித்த ஆட்சியர்

image

காவேரிப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ அரசு பொதுத்தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்கள் இன்று தேர்வு எழுதினர். இந்த தேர்வை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் தேர்வு நடக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரியிடம் ஆட்சியர தெரிவித்தார். மேலும் குடிநீர் வசதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

News March 3, 2025

+2 மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் 

image

தமிழகம் முழுவதும் இன்று +2  பொது தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வை எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி மாணவர்கள் அனைவரும் தேர்வு நன்கு எழுதி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். இத்தேர்வை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

News March 3, 2025

ஐஎன்எஸ் ஊழியர் மயங்கி விழுந்து பலி 

image

செய்யூரை சேர்ந்தவர் ரவி (57) இவர் அரக்கோணம் இந்திய கடற்படை விமானதளத்தில் கேண்டினில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 2, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( மார்ச் 2 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News March 2, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச் 3-ல் தொடங்கி 25ம் தேதி வரை நடக்கிறது. இதில் மாவட்ட முழுவதும் 13,837 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 64 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மூன்று வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News March 2, 2025

போஸ்ட் ஆபிசில் வேலை; நாளையே கடைசி

image

ராணிப்பேட்டையில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 35 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். நாளைக்குள் (மார்.3) இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News March 2, 2025

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு

image

2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 3) தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், மாணவர்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள், ஐயங்களைத் தெரிவிக்க வசதியாக, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 9498383075, 9498383076 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

error: Content is protected !!