India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திரா மாநிலம் சித்தூர் சேர்ந்தவர் ஹனிஃபா. இவர் டெய்லரிங் ஸ்பேர் பார்ட்ஸ் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த வட மாநில இளைஞர்கள், ஆசை வார்த்தைகளைக் கூறி ராணிப்பேட்டைக்கு வரவைத்து வெளிநாட்டு பணம் கொடுப்பதாக பேப்பர் கட்டுகளை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி செய்து தப்பி சென்றனர். இதுகுறித்து புகாரின்பேரில் ராணிப்பேட்டை போலீசார் வட மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று மார்ச் 28 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. கொண்டபாளையம் அவளூர் வாலாஜா திமிரி ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச் 28) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வந்த யுவராஜ் ஆட்சியர் அலுவலகத்தில் சி பிரிவு உதவியாளராகவும், அங்கு பணியாற்றி வந்த ராஜ்குமார் சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டம் முழுதும் 7 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவிலும் நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை தடுக்கவும், வெளி மாநிலத்தவர், வெளி ஆட்கள் நெல் மூட்டைகள் கொண்டு வருவதை கண்காணித்து தடை செய்யவும் ஒவ்வொரு தாலுகாவிலும் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து கண்காணிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றங்கள் காலதாமதம் நிலுவையில் உள்ள பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கலந்து கொண்டு அனைத்து துறைகளின் விவரங்கள் கேட்டிருந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் வழக்கமாக மார்ச், ஏப்ரல், மே, மாதங்களில் வெயில் சுட்டெரிப்பது வழக்கம். குறிப்பாக மே மாத அக்னி நட்சத்திர காலத்தில் தான் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். இந்த நிலையில் இன்று (மார்ச் 28) ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் 37°C-ஐ தொட்டுள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெயிலால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று சமூக வலைத்தளத்தை வெளியிட்டுள்ள செய்தியில், சில விஷயங்களை பகிரக்கூடாது, உங்கள் கடவுச்சொல்லை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். தகவல் பாதுகாப்பு உங்களிடமிருந்து தொடர்கிறது என மாவட்ட காவல்துறை சமூக வலைத்தளத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. உதவிக்கு சைபர் கிரைம் 1930-ஐ அழைக்கலாம்.
ராணிப்பேட்டை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி இன்று(மார்.28) சட்டசபையில் தனது துறை மானிய கோரிக்கையின் மீது கூறும்போது ராணிப்பேட்டையில் நகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் ரூ.1.50 கோடியில் நகராட்சி நிர்வாகத்தால் கட்டப்படும் கட்டிடத்தில் கோ ஆப் டெக்ஸ் ஒருங்கிணைந்த கைத்தறி விற்பனை வளாகம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்தார்.
வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொது தேர்வு மையத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எந்தவித முறைகேடுகளும் நடைபெறாமல் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி மின்சார வசதி செய்து தர வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.