India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சோளிங்கர், தலங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன்(45). இவர் இன்று காலை 11 மணிக்கு வாங்கூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அரிச்சந்திரன் கோயில் அருகில் செல்லும்போது எதிரே ஜெயபிரகாஷ்(19) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், இவர் மீது மோதியது. இதில் ராமன் படுகாயம் அடைந்து வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (மே.24) அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூா்த்தி தலைமையில், ராணிப்பேட்டை பாரதி நகா் பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது எனவும் ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என திமுக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில் பாதையில் கடம்பத்தூர் செஞ்சி பானம்பாக்கம் இடையே நேற்றிரவு மின்சார ரயில் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக, அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் திருவள்ளூர் அயப்பாக்கத்தைச் சேர்ந்த டில்லி பாபு (44) என்பது தெரியவந்தது.

ராணிப்பேட்டை, சோளிங்கர் பஜார் தெருவில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீசோழபுரீஸ்வரர் கனக்குஜம்பாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு மகா அதிகார நந்தி உற்சவம் நடைபெற்றது. இதில் சுவாமி மங்கள வாத்தியங்கள் முழங்க மகா அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். 8 மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இராணிப்பேட்டையில் மலை போல் குவிந்து கிடக்கும், மக்களின் உயிரை குடிக்கும் குரோமிய கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வழக்கறிஞர் கே.பாலு மூலமாக பொது நல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் மத்திய மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 10.06.2024 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது.

அரக்கோணம் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாலாஜா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இங்கு சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை அதை கண்காணிக்கும் கேமரா கட்டுப்பாட்டு அறை நல்ல முறையில் இயங்குகிறதா என்று ஆட்சியர் வளர்மதி இன்று பார்வையிட்டு கையெழுத்திட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ அரசு பொது தேர்வில் அரசு பள்ளியில் 100% தேர்ச்சி கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். எஸ்.பி கிரண்ஸ்ருதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை, அரக்கோணம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.28 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி நேற்று ஆய்வு செய்தாா். அப்போது அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் வரும் ஜூன் மாதத்துக்குள் தரமாக முடிக்க வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மே.22) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

வாலாஜா போலீஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்த ஐந்து கடைகளுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி உத்தரவின் பேரில் நேற்று இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா சீல் வைத்தார். மேலும், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் தலா 25 ஆயிரம் ரூபாய் 5 கடைகளுக்கு அபராதம் விதித்தார்.
Sorry, no posts matched your criteria.