India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டையில் நேற்று (மே.30) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அரக்கோணம் பகுதியில் 1 செ.மீட்டர் மழைப்பொழிவு பதிவானது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கான குருப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் பயன்பெறும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக கலெக்டர் வளர்மதி தகவல் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் 041722-91400 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

ராணிப்பேட்டை திருமலை அறக்கட்டளை மருத்துவமனை சார்பில் வாய்வழி புற்றுநோய் சிகிச்சை, பச்சிளம் குழந்தை சுகாதாரம் மற்றும் பராமரிப்பு திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திட்டம் ஆகிய மூன்று சிறப்பு சிகிச்சை திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனா் லட்சுமி, வாலாஜா அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் உஷா நந்தினி ஆகியோா் தொடங்கி வைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மே.30) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பதிவாகக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக நின்று வெப்பம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பகுதியில் அமைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட அலுவலகத்தில் சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் சௌந்தர் தலைமையில் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த மாற்று கட்சியினர் தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக்கொண்டனர். இதில், மத்திய மாவட்ட செயலாளர் சீமா. ரமேஷ் கர்ணா முன்னிலை வகித்தார்.

ராணிப்பேட்டை நகராட்சி ஆர்.ஆர். சாலையில் துக்க நிகழ்வுக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென இன்று(மே 30) காலை தீப்பிடித்து வெடித்தது. விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை மாவட்ட ஆட்சியர் வளர்மதி பார்வையிட்டு ஆறுதல் கூறினார். வட்டாட்சியர் வெங்கடேசன், டாக்டர் உஷா நந்தினி ஆகியோர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 4 ம்தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள், அவர்களின் முகவர் மற்றும் வாக்கு எண்ணும் மைய முகவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த கூட்டம் இன்று நடைபெற்றது. உடன் ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். எஸ் பி கிரண்ஸ்ருதி, நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், ஏ டி எஸ் பி குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பாரத ஜோதி சீனியர் சிவில் சர்ஜன் மருத்துவர் செங்கோட்டையன் சமூக சேவையை பாராட்டி கலவையில் சான்று வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலவை ஆல் இந்தியா என்வைண்ட் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் சேவா ரத்னா கதிர்வேல், நிர்வாக இயக்குனர் தங்கப்பாவை தமிழரசி சிவசங்கர் மற்றும் கிருஷ்ணா கேப்சர்ஸ் நிறுவனர் கிருஷ்ணகுமார் , ஸ்டில் மனோகர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை, வெம்பாக்கம் வட்டம் நாயந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் ( 50), அரசுப் பேருந்து நடத்துநர். இவர் நேற்று தனது நண்பருடன் மகளின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு வழங்க பைக்தில் சென்றார். அப்போது கலவை- வாழைப்பந்தல் அருகே பைக் நிலை தடுமாறி சாலை ஓரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது நண்பா் ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2024-25ம் ஆண்டின் மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பின்படி முதுநிலை பிஎச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்புகள் வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விரும்புவோர் மே 31க்குள் ஓவர்சீஸ் டிரைபிள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.