India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரக்கோணம் அடுத்த பெரு மூச்சியில் இரண்டு ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் உள்ள மீன்கள் இன்று செத்து மிதந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் எம்எல்ஏ ரவிக்கு தகவல் தெரிவித்தனர் . இதைத் தொடர்ந்து எம்எல்ஏ ரவி இன்று ஏரியை நேரில் பார்வையிட்டு மீன்கள் எதனால் செத்து இருந்தன என்று பொதுப்பணித்துறையினரிடம் கேட்டு அறிந்தார். மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பழனி ,அதிமுக பிரமுகர் நரேஷ் உடன் இருந்தனர்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் வாலாஜா அரசு கல்லூரியில் நாளை எண்ணப்படுகின்றன. இதற்கான பணியாளர்கள் குழுக்கள் முறையில் இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அரக்கோணம் அடுத்த தண்டலத்தை சேர்ந்தவர் சேட்டு (42). இவர் நேற்று இரவு வீட்டுக்கு வெளியில் படுத்திருந்த பெண் ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை பெண்ணின் உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதில் மயங்கி விழுந்த அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இன்று சேட்டு இறந்தார். மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கலவை தாலுகா கணியனூர் கிராமத்தில் இன்று இரவு பலத்த காற்று வீசியது. இதனால் கணியனூர் கிராமத்தில் சாலை ஓரம் இருந்த 2 புளிய மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் (ம) வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஜேசிபி இயந்திரத்தை வைத்து புளிய மரங்களை வெட்டி அகற்றினர். இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆற்காடு தாலுகா திமிரி அடுத்த மேலதாங்கல் களர் குடிசை கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் (48) என்பவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் திமிரி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூன்.2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டையில் நாளை, இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இன்று குழந்தைகளின் பள்ளி வாழ்க்கையை எளிதாக்க ஐஸ்-பிரேக்கிங் பயிற்சி பட்டறை பள்ளி நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியில் பணிபுரிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ம்தேதி எண்ணப்படுகிறது. இதையொட்டி ஜூன் 4 ம்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களிலும் பார்கள் இயங்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

விசைத்தறி நெசவாளர்களுக்கு கைத்தறி துறையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 1000 யூனிட் இலவசம் மின்சாரம், பிரதான் மந்திரி நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.50,000 முதல் 2 லட்சம் வரை மானியத்துடன் கடன், விசைத்தறிகளுக்கு மானியத்துடன் எலக்ட்ரானிக் பேனல் போர்டு வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 0416 22 42547 என்ற எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் ஆட்சியர் வளர்மதி இன்று அறிவித்துள்ளார்

இன்று (01.06.2024) முதல் அமலுக்கு வந்த போக்குவரத்து புதிய விதிமுறையின் படி 18 வயதுக்குட்பட்ட சிறார் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, ரூ.25000 அபராதமும் 3 மாதங்கள் சிறையும் விதிக்கப்படும். மேலும் வாகனம் ஓட்டும் சிறுவருக்கு 25 வயது நிரம்பும் வரை ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்படும் எனவே சாலை விதிகளை பின்பற்ற ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.