Ranipet

News June 8, 2024

சோளிங்கர் கோவிலில் ஆண்டாள் புறப்பாடு உற்சவம்

image

ராணிப்பேட்டை, சோளிங்கர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சாமி திருக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வாராந்திர ஆண்டாள் புறப்பாடு உற்சவம் இன்று நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

News June 7, 2024

ராணிப்பேட்டையில் 10 செ.மீ மழைப்பதிவு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜூன்.06) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரக்கோணம் பகுதியில் 11 செ.மீட்டரும், கலவாய் பகுதியில் 5 செ.மீட்டரும், ஆற்காடு பகுதியில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News June 7, 2024

சீரான மின்விநியோகம் கேட்டு சாலை மறியல்

image

கலவை, வாழைப்பந்தல் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோயில் தெரு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக சீரான மின்விநியோகம் இல்லை. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை நேரிலும் மனுவாக கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த வாழைப்பந்தல் – ஆரணி சாலையில் நெசவாளர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

News June 7, 2024

ராணிப்பேட்டை: மழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (07.06.24) மதியம் 1 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டையில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

ராணிப்பேட்டையில் 293 மி.மீட்டர் மழை

image

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட அரக்கோணம், பனப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று(ஜூன் 6) மாலை முதல் இன்று காலை 6 மணி வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 110.5 மி.மீட்டர் மழை பதிவானது. மொத்தமாக மாவட்டம் முழுவதும் 293 மில்லி மீட்டர் மழை பெய்து, இரவில் குளிர்ந்த காற்று வீசியது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

ஆற்காடு அருகே எஸ்பி திடீர் ஆய்வு!

image

ஆற்காடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி நேற்று(ஜூன் 6) திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து ஆற்காடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதியில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். தலைமறைவு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார். டவுன் இன்ஸ்பெக்டர் சசிகுமார் உடன் இருந்தார்.

News June 6, 2024

வேலையில்லா இளைஞர்களுக்கு நூற்பு பயிற்சி

image

அனைத்து மாவட்டங்களிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு நூற்பு மற்றும் தொழில்நுட்ப ஜவுளித்துறை தொடர்பான பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் முதற்கட்டமாக ஜவுளி துறைக்காக டிஎன் டெக்ஸ்டைல்ஸ் என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பயிற்சி தேவைப்படுவோர் இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

News June 6, 2024

வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை

image

சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் கிராமத்தில் டிவிஎஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஸ்ரீ தேவி, டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், தொழிற்சாலை நிர்வாகத்தினர் கலந்து கொண்ட அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

News June 6, 2024

வாலாஜா: வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்த ஷேக் மயூம் ஆலம்(40) என்பவர் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். தொடர்ந்து, மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

News June 5, 2024

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் ஆட்சியர்

image

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டம் தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி பயின்று மேற்படிப்பில் சேரும் பட்டப்படிப்பு பட்டய படிப்பு அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூபாய் 1000 தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நேரடியாக அனுப்பப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!