Ranipet

News June 14, 2024

ராணிப்பேட்டை: நண்பரை அடித்த கொன்ற முன்னாள் ராணுவ வீரர்

image

ராணிப்பேட்டை, வாலாஜா, பில்லியப்பா நகரைச் சேர்ந்தவர் ரகோத்தமன் (54). பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (54), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில், நேற்றிரவு ராஜேந்திரனின் வீட்டில் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன் கட்டையால் தாக்கியதில் ரகோத்தமன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News June 14, 2024

ஜூன் 21 முதல் 27 ஆம் தேதி வரை ஜமாபந்தி

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் நெமிலி, சோளிங்கர், ஆற்காடு, வாலாஜா, கலவை, என 6 வட்டாட்சியர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி ஜூன் 21ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது . இது குறித்து அரசிதழில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் குறித்து ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி அனைத்து வட்டாட்சியர் அலுவலர்களுக்கும் தகவல் அளித்துள்ளார்.

News June 14, 2024

திருநங்கைகளுக்கு குறை தீர்வு கூட்டம் ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூன் 21 காலை 10 மணி அளவில் திருநங்கை மற்றும் திரு நம்பிகளுக்கான சிறப்பு முகாமானது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடக்கிறது. திருநங்கைகளுக்கான ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்கிட மாவட்ட சமூக நல அலுவலகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்

News June 14, 2024

உதவித்தொகை வழங்க வேண்டி எம்எல்ஏ அறிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு வழங்கும் மாத உதவித் தொகை வேண்டி விண்ணப்பம் செய்தவர்களில் 5000 பேர் தகுதியுள்ள பயனாளிகள் என அவர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது .ஆனாலும் ஒராண்டிற்கு மேலாகியும் விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் ,முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கவில்லை. எனவே விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ ரவி அறிக்கை விடுத்துள்ளார்.

News June 14, 2024

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 வட்ட வழங்கல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதற்கான முகாம் நாளை ஜூன் 15ஆம் தேதி நடக்கிறது. பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

News June 13, 2024

முதலமைச்சரிடம் பிறந்தநாள் வாழ்த்து

image

இராணிப்பேட்டை மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் PNS சரவணனின் பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சரை இன்று (ஜூன் 13) நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், பரிசாக புத்தகத்தையும் பெற்றுக் கொண்டார்.

News June 13, 2024

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 13, 2024

பெட்ரோல் குண்டு வீச்சு; ராணிப்பேட்டையில் கைது

image

சென்னையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், ராணிப்பேட்டையில் போலீசார் இருவரை கைது செய்தனர். அப்போது, தப்பி ஓடிய இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில், சென்னையையில் செந்தில்குமார் என்பவர் தங்களை போலீசாரிடம் சிக்க வைத்துவிட்டு, அவர் கஞ்சா விற்று வருவதாகவும், இதனால் அவரை அச்சுறுத்தும் வகையில் பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

News June 12, 2024

ராணிப்பேட்டை போலீசார் உறுதிமொழி 

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் ஏடிஎஸ்பி சரவணன் டிஎஸ்பிக்கள் பிரபு வெங்கடேசன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் முதல் நிலைக்காவலர்கள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தனர்.

News June 12, 2024

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
D.V கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில்,  கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுக்கா பழையபாளையம் காலனி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த குற்றவாளி வடிவேலு(57) என்பவர் இன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!