India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஜூன் 28ஆம் தேதி காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடை பெறுகிறது. இக்கூட்டத்தில் வேளாண் தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் பட்டு வளர்ச்சி துறை, மீன்வளத்துறை கால்நடை பராமரிப்பு, துறையினர் கலந்து கொள்வதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. ஏடிஎஸ்பி குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் 41 மனுக்கள் பெறப்பட்டன. இதில் சீட்டு பணம் தராதது, இணைய வழிய குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக மனுக்கள் தரப்பட்டது. இதில் டிஎஸ்பி சீராளன், வெங்கடகிருஷ்ணன், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த ராமபாலயத்தை சேர்ந்த கிருபாகரன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த 7 குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கிவிட்டு செங்கல் சூலையில் கொத்தடிமைகளாக நடத்துவதாகவும் பணி செய்ய மறுத்தால் ரூ.1 லட்சம் தரவேண்டும் என மிரட்டுவதாகவும் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளனர்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் பிஞ்சி ஏரியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் மற்றும் துணை தலைவர் ரமேஷ் கர்ணா ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ரவி நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் எம்எல்ஏ ரவி பேசுகையில், “அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தலா 5 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக அரக்கோணத்தை தரம் உயர்த்த வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்” என்றார். மேலும், இந்த ஆய்வின் போது தலைமை மருத்துவர் நிவேதிதா மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை, மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூன் 20) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வாழப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணாவரம் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரியத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

வாலாஜா அடுத்த அம்மூர் பேரூராட்சி குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதன் விளைவாக 7 குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மூர் பேரூராட்சி அதிமுக செயலாளர் தினகரன் தலைமையில் அம்மூர் பேரூராட்சி கவுன்சிலர் ரகு, சசிதரன் பாரதிதாசன் ஆகியோர் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வளர்மதியிடம் இன்று மனு கொடுத்தனர்.

சோளிங்கர் அடுத்த கரிக்கல் ஊராட்சிக்குட்பட்ட ராமானுஜர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று குடும்பத்துடன் வந்த போது அவரது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகை திருடியது தெரியவந்தது. கொண்டபாளையம் போலீசில் பிரபாகரன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராணிப்பேட்டையில் உள்ள ஈத் கா மைதானத்தில் 3,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். அதன் பின்னர் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

அரக்கோணம் மாதவ நகரை சேர்ந்தவர் கண்ணன்(21). இவருக்கும் வடமாம்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று(ஜூன் 16) மாலை ஹவுசிங் போர்டு பகுதியில் கண்ணனை பார்த்த மணி தலை மற்றும் காதில் கத்தியால் வெட்டினார். தொடர்ந்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கண்ணன் அனுப்பி வைக்கப்பட்டார். புகாரின் பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.