India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சோளிங்கரைச் சேர்ந்த சின்னையன் என்பவர் ஜமாபந்தி அலுவலரான ஆர்டிஓ மனோன்மணியிடம் கொடுத்த மனுவில், ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவைத்தலைவர் அசோகன், கொண்ட பாளையம் தக்கான்குளம் செல்லும் வழியில் நீர்வள கால்வாய் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வருகிறார். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மனு கொடுத்தார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில், மாவட்ட செயலாளர்கள் சுகுமார், ரவி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி ஒருவர் கழுத்தில் (மாதிரி) சாராய பாக்கெட்டுகளை அணிந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவத்தைக் கண்டித்து, அதிமுகவினர் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில், அசம்பாவித சம்பவங்களை தடுக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவினர் வந்தால் உடனடியாக கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

வாலாஜா அடுத்த புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில், திருவள்ளூர், திருத்தணி, செருக்கனுாரைச் சேர்ந்த 5 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை ஆர்டிஓ மனோன்மணி, ஆய்வு மேற்கொண்டு அந்த 5 பேரையும் மீட்டனர். பின்னர், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 5 பேரையும் ஒப்படைத்தார்.

அதிமுக சார்பில் நாளை தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் s.m.சுகுமார், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி துணை கொறடா, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர்.சு.ரவி ஆகியோர்களின் தலைமையில் இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் திமுக அரசை கண்டித்து” மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூன் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. எனவே நாளை 24ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது. அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி வருவாய் அலுவலரிடம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மனுக்களை கொடுத்து மக்கள் பயன்பெறலாம் என்று ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி பேனர்கள் மற்றும் பிளக்ஸ் வைக்கக்கூடாது என கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் பிறந்த நாளை ஒட்டி வைக்கப்பட்ட பேனர்களை ராணிப்பேட்டை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மேலும் தனியார் இன்ஸ்டிட்யூட் அபாகஸ் விளம்பரத்திற்காக வைக்கப்பட்ட பேனரும் அகற்றப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி பேனர்கள் மற்றும் பிளக்ஸ் வைக்கக்கூடாது என கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பிறந்த நாளை ஒட்டி வைக்கப்பட்ட பேனர்களை ராணிப்பேட்டை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மேலும் தனியார் இன்ஸ்டிட்யூட் அபாகஸ் விளம்பரத்திற்காக வைக்கப்பட்ட பேனரும் அகற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-I போட்டித் தேர்விற்கான மாதிரித் தேர்வு இன்று (ஜூன் 22) காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரித் தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள், புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் போட்டித் தேர்வில் பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-I போட்டித் தேர்விற்கான மாதிரித் தேர்வு நாளை (22.06.2024) காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரித் தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள், புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் போட்டித் தேர்வில் பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.