India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை வாலாஜா காசி விஸ்வநாதர் கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் -25) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
ராணிப்பேட்டையில் உள்ள முக்கியமான இந்நினைவுச் சின்னம் வாலாஜாவில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ள பெருங்காஞ்சி என்ற கிராமத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. பல்லவர் காலத்தில் செதுக்கப்பட்ட இச்சிலைகள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டை சார்ந்தவைகளாகும். பல்லவர்களின் கலைப்பாணிக்கு இச்சிலைகள் ஓர் நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. பழையமான இடங்களை விரும்புவோர்களுக்கு இதை பகிரவும்.
பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது, அந்த வகையில் ஆம்பூர்-04174 246204, ஆரோகணம்-04177 232190 ராணிப்பேட்டை-04172 – 273990 ஆற்காடு- 04172 235 950 சோளிங்கர்-04175 222060 நெமிலி- 04177 247 218 இரவில் தனியாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்
பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் – 04172 – 273990 , 04172 – 275209; அரக்கோணம் – 04177 232190; மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அவரச உதவிக்கு 1091. இதனை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே திருவாலங்காடு என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதற்கு அருகே ரயில் தண்டவாள இணைப்புகளில் உள்ள போல்ட்டுகளை மர்ம நபர்கள் கழற்றிவிட்டுள்ளனர். தண்டவாளத்தில் உள்ள போல்ட்டுகளை கழற்றி ரயிலை கவிழ்க்க சதியா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். அவ்வழியாக இயக்கப்படும் ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு சாலை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (ஏப்ரல் 25) காலை 10 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு +2, பட்டப்படிப்புகள், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், மற்றும் பி.இ படித்தவர்கள் பங்கேற்கலாம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 24 இரவு ரோந்து பணியில் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை பாணாவரம் தக்கோலம் திமிரி ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம். 9884098100
ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை அருகேயுள்ள வன்னிவேடு அகத்தீசுவரர் கோயிலில் உள்ள மூலவரை அகத்திய முனிவர் மணலால் அமைத்து வழிபட்டார், வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இத்தலத்துக்கு வன்னிக்காடு என்ற பெயரும் உண்டு. இந்த கோயிலின் பூஜையில் கலந்து கொண்டால் வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் தடங்கலின்றிக் கட்டி முடிப்பார்கள் என்கிற நம்பிக்கையுண்டு, வீடு கட்டும் பணி தடைபடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.
ராணிப்பேட்டையில் பிரசன்னா வெங்கடேஸ்வராபெருமாள் கோயிலின் சிறப்பாக பெருமாளின் 108 தெய்வதளத்தில் 107வது தளமான திருப்பாற்கடலை உடலுடன் சென்று பார்க்க முடியாது என்பதால் அந்த குறையை தீர்ப்பதற்காக பெருமாள் இந்த திருப்பாற்கடலில் அருள்கிறார். திருப்பாற்கடல் பெருமாளை தரிசித்தால் 107வது தளமான திருப்பாற்கடல் பெருமாளை தரிசித்த பலன் கிடைக்குமென்பது நம்பிக்கை இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Sorry, no posts matched your criteria.