Ranipet

News July 23, 2024

மர்மமான முறையில் பள்ளி மாணவி உயிரிழப்பு

image

சோளிங்கர் ரெண்டாடி கிராமத்தை சேர்ந்த மணிவேலுவின் மகள் நிகிதா அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். வீட்டில் இருந்து திடீரென காணாமல் போன மாணவி அங்குள்ள கிணற்றில் சடலமாக கிடப்பதாக இன்று தகவல் கிடைத்தது. சோளிங்கர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று மாணவி நிகிதாவின் உடலை கைப்பற்றி இவர் எப்படி இறந்தார் என விசாரித்து வருகின்றனர்.

News July 23, 2024

ராணிப்பேட்டையில் ஆலோசனைக் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கோட்ட பொறியாளர்களான செல்வகுமார், சுந்தரி மதன்குமார், லட்சுமி காந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News July 23, 2024

57 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம் – ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 57 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி தொழில்நுட்ப ஆலோசனை, விதை நேர்த்தி, உர நிர்வாகம், இதர திட்டங்கள் கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News July 23, 2024

ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் ஜூலை 26ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 4360 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News July 23, 2024

மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப. அவர்கள் இன்று (23.07.2024) பனப்பாக்கம் பேரூராட்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று 10ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடினர். உடன் பேரூராட்சி தலைவர் கவிதா ஸ்ரீனிவாசன், தலைமை ஆசிரியர் அபிதா ஆகியோர் உள்ளனர்.

News July 23, 2024

காவல் ஆய்வாளருக்கு தமிழக டிஜிபி பாராட்டு

image

காவல் நிலையங்கள் மேம்பட்ட சேவை மக்களுக்கு வழங்குவதை ஊக்குப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் 3 காவல் நிலையங்களை முதலமைச்சர் கோப்பை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ராணிப்பேட்டை காவல் நிலையம் மக்களின் தேவையாக விளங்கி வரும் சிறந்த காவல் நிலையமாக தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு, காவல் ஆய்வாளர் பார்த்தசாரதிக்கு டிஜிபி சங்கர் ஜூவால் பதக்கம் வழங்கி பாராட்டினார்.

News July 23, 2024

தெற்கு ரயில்வே அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கோட்டத்தில் 113 அப்ரண்டீஸ் பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12.08.2024 கடைசி தேதியாகும். https://rrccr.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க..

News July 23, 2024

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலப்படம், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உணவுப்பொருள் பாக்கெட்களில் உற்பத்தி, பேக்கிங் தேதி, எடை, விலை குறிப்பிடாமல் விற்பது, மேலும், உணவு பொருட்களில் கலப்படம் செய்வது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

News July 22, 2024

நெமிலி தாலுகா கிராமங்களில் தங்கும் ஆட்சியர்

image

நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் வரும் 24ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற இருக்கிறார். அப்போது பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளான குடிநீர், கழிவுநீர், கால்வாய், மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்கிறார். அன்று இரவு ஏதேனும் ஊரில் தங்கி இருந்து மறுநாள் காலை நெமிலி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஆய்வு செய்கிறார்.

News July 22, 2024

சோளிங்கர் அருகே 4 வயது சிறுமி உயிரிழப்பு

image

சோளிங்கர் தாலுகா தாளிக்கால் அடுத்த பனவட்டாம்பாடி பாடசாலை தெருவை சேர்ந்தவர் 4 வயது சிறுமி இன்று வீட்டின் அருகில் உள்ள குட்டைப் பகுதிக்கு சென்று தண்ணீரில் தவறி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் குழந்தை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து ஏற்கனவே குழந்தை பிரியங்கா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!