Ranipet

News July 27, 2024

ராணிப்பேட்டையில் போலீஸ் கவாத்து பயிற்சி

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஆயுதப்படை தலைமையகத்தில் இன்று போலீசாருக்கான வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியின்போது போலீசார் தங்களது உடல் தகுதி திறனை நிரூபிக்கும் வகையில் உடற்பயிற்சிகள் செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி போலீசாரின் உடல் தகுதித் திறனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .டிஎஸ்பி வெங்கடேசன் உடன் இருந்தார்

News July 27, 2024

இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

image

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் R. காந்தி தலைமையில், ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு எந்தவித திட்டத்தையும் அறிவிக்காத பாஜக அரசை கண்டித்து இன்று காலை 10:00 மணிக்கு ராணிப்பேட்டை முத்து கடையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்

News July 26, 2024

ராணிப்பேட்டையில் ஆய்வுக் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ஆற்காடு, வாலாஜா, கலவை, சோளிங்கர், நெமிலி என மொத்தம் 6 தாலுகா உள்ளது. இந்த தாலுகாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருக்கின்றனர். தகுதியானவர்களுக்கு ரேஷன் கார்டு ஒப்புதல் அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

News July 26, 2024

ராணுவ வீரர் உட்பட 9 பேர் தலைமறைவு

image

ஆற்காடு அடுத்த மோசூர் கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. திமிரி போலீசார் இரு தரப்பினரிடம் புகார் பெற்று ராணுவ வீரர், அரசு சித்த மருத்துவ உதவியாளர், ஊர் நாட்டாமைக்காரர் என 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த 9 பேரும் தலைமறைவாக உள்ளனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

News July 26, 2024

மனைவி வெட்டிக் கொலை: கணவன் கைது

image

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் பாறைமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஓம்பிரகாஷ், கருத்து வேறுபாடு காரணமாக எழுந்த முன்விரோதத்தில் மனைவி சந்தியாவை, மாமியார் வீட்டில் வைத்து கத்தியால் வெட்டி இன்று கொலை செய்துள்ளார். கொலை செய்த ஓம்பிரகாஷை கைது செய்த பானாவரம் போலீசார், சம்பவம் குறித்து நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

News July 26, 2024

ஆற்காட்டில் பாஜக ஆலோசனை கூட்டம்

image

ஆற்காடு பகுதியில் உள்ள ஆற்காடு நகர பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆற்காடு நகர பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தெருமுனை பிரச்சாரங்கள் நடத்துவது மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

News July 26, 2024

ஆட்சி செய்யும் பெண் அதிகாரிகள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலெக்டர் சந்திரகலா, எஸ்பி கிரண்ஸ்ருதி, ஆர்டிஓ பாத்திமா, திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நகராட்சி தலைவிகள் சுஜாதா (ராணிப்பேட்டை), ஹரிணி (வாலாஜா), தமிழ்செல்வி (சோளிங்கர்), தேவி (ஆற்காடு), லட்சுமி (அரக்கோணம்) என்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் 90 % பெண்கள் ஆட்சி செய்து வருகின்றனர்.

News July 26, 2024

ராணிபேட்டை கிழக்கு மாவட்டத் தலைவர் நியமனம்

image

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி ராணிபேட்டை கிழக்கு மாவட்டத் தலைவராக மோகன்காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அரக்கோணம், சோளிங்கர் இரு தொகுதிகளை உள்ளடக்கி ராணிபேட்டை கிழக்கு மாவட்டமாகவும், ராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதிகளை உள்ளடக்கி மேற்கு மாவட்டமாகவும் பிரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News July 26, 2024

ராணிப்பேட்டையில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News July 25, 2024

பொதுமக்கள் நன்கொடையாக அளிக்கலாம் – ஆட்சியர்

image

சென்னை மெரினா கடற்கரை எதிரே ஹூமாயூன் மஹால் கட்டிடத்தில் சுமார் 80 ஆயிரம் சதுர அடி பரப்பில் சுதந்திர தின அருங்காட்சியம் அமைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைத்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. எனவே பொது மக்கள் தங்கள் சேகரித்து வைத்துள்ள சுதந்திரம் போராட்டம் தொடர்பான பொருட்களை நன்கொடையாக அளிக்கலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!