India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிபேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வரும் 17ம் தேதியன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு வழங்க உள்ளது. 10th, 12th, டிப்ளோமா & ITI படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <

ஆற்காடு அடுத்த புது மாங்காட்டில், அக்.11ல் நடத்த கிராம சபை கூட்டத்தில் 100 நாள் திட்ட பணிகளில் ஈடுபட்ட, 60க்கும் மேற்பட்ட பணியாளர்களை, முதல்வர் காணொலியில் பங்கேற்றனர். பின்னர் பணிக்கு திரும்பிய அவர்களின் வருகை பதிவை ஏற்றுக்கொள்ளாமல், அதிகாரிகள் கூலி வழங்க முடியாது என கூறியுள்ளனர். நேற்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவ்வழியாக வந்த ஆற்காடு தாசில்தார் U TURN எடுத்தது சர்ச்சையாகியுள்ளது.

மிட்டப்பேட்டை அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை சாந்தி(48), தலைமை ஆசிரியை செந்தாமரை மற்றும் மாணவிகளுடன் பள்ளியில் இருந்து மெயின் ரோட்டுக்கு நேற்று (அக்.13) பள்ளி நேரம் முடிந்து வந்து கொண்டிருந்தார். இவர்களுக்கு பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் ஆசிரியை சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் தலைமை ஆசிரியை செந்தாமரை மற்றும் 2 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இதனை தாலுகா போலீசார் விசாரித்துவருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 17ம் தேதியன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.முகாமில் 8ம் வகுப்பு முதல் 10ம்,12ம் வகுப்பு,பட்டப்படிப்பு,ஐடிஐ,டிப்ளமோ நர்சிங் மற்றும் பிஇ முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.எனவே வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக் கொண்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அக்.13 ம் தேதி மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர். வேலைவாய்ப்பு, பட்டா மாறுதல், மின் இணைப்பு, குடும்ப அட்டை என மொத்தம் 636 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்று (அக்.13) இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் இருந்து ரூ.2.79 கோடி மதிப்பீட்டில் 3 புதிய தாழ்தள புறநகர் பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கொடியசைத்து துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா, திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில் இன்று (அக் 13) மோசடிக்காரர்கள் பட்டாசு விற்பனையில் அதிக தள்ளுபடி தருவதாக ஆசை வார்த்தை கூறி வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி முன் பணமோ அல்லது தங்களது முழு தகவலையோ பகிர்ந்து ஏமாற வேண்டாம்.இது மோசடியாக இருக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கப்படுகிறது

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தினசரி இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாகன ரோந்து, கால்நடை ரோந்து என இருவிதமாகவும் பணி செய்து வருகின்றனர்.

இன்று (அக்.13) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், தலைமையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை,அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகளை குறித்தும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் ஆலோசிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (அக்.13) திங்கள்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் சந்திரகலா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டுஅறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம்,மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம்,தனித்துணை ஆட்சியர் கீதாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.