India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் இரத்தினகிரி திருமுருகன் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 19 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.மேலும் சுமார் 56 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.இப்பகுதிகளில் நெல் நடவு மற்றும் அறுவடை குறித்து சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள் கண்காணித்து விவாசயிகளின் தேவைகளை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டுமென ஆட்சியர் வேளாண் அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒரு ஆற்றுப்படுத்துனர் பதவி முற்றிலும் தற்காலிக தொகுப்பபூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 42 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் முகவரிக்கு அனுப்பலாம் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக ஜெயசுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றி வந்த திட்ட இயக்குனர் லோகநாயகி செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனராக இன்று பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் குறித்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் நெடும்புலி மதுரா மஹால் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற உள்ளது. எனவே மேலபுலம், பொய்கை நல்லூர், ரெட்டிவலம், அகவலம், நெடும்புலி, வேட்டாங்குளம் ஆகிய கிராம மக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டி தருவதற்கு 3,333 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 2,431 பேருக்கு பட்டா இடம் உள்ளது அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது. ஆனால் மீதமுள்ள 902 பேருக்கு பட்டா இல்லாததால் அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 56 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 19 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அரசு கட்டிடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு இருப்பதால் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில், திண்டிவனம் நகரி ரயில் பாதை திட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் சிறப்பு தாசில்தார் மதிவாணன், சோளிங்கரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டு அந்த உரிமை ஆவணத்தை திருப்பித் தர இன்று ரூ. 4000 லஞ்சம் வாங்கிய போது ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைத்தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 44 மனுக்கள் பெறப்பட்டன. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், துணை காவல் கண்காணிப்பாளர் சீராளன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.