India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ராணிப்பேட்டை, அரக்கோணம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், திமிரி, ஆற்காடு, வாலாஜா ஆகிய 10 மையங்களில் நேற்று நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் திறனாய்வு தேர்வினை 688 மாணவர்கள், 1355 மாணவிகள் என மொத்தம் 2043 மாணவ மாணவிகள் எழுதினர். 100 மாணவர்கள், 103 மாணவிகள் என மொத்தம் 203 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் அமைந்துள்ள ஜலநாதீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.தொண்டை நாட்டுத் தலங்களில் 12 வது திருத்தலம். இத்தலத்தில் காமதேனு வழிபட்டதால் இங்கு செய்யும் சிவ புண்ணியம் ஒன்றுக்கு நூறு மடங்காக அதிகரிக்கும் என புராணம் கூறுகிறது. இக்கோவிலில் வழிபட்டால் பெண்களின் கர்ப்ப கால பிரச்ச்னைகள் தீரும் என்பது ஐதீகமாக உள்ளது.

தமிழத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா எனபதை கமென்டில் குறிப்பிடவும்

தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று மழை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 8:30 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், நெமிலி, சோளிங்கர் வட்டங்களில் இருந்து கரும்பை விவசாயிகள் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அனுப்பி வருகின்றனா் நிகழாண்டு ஆலைக்கு அனுப்பும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு மத்திய அரசு சாா்பில் ரூ.3150ம், தமிழக அரசின் கரும்பு ஊக்கத் தொகை ரூ215 சேர்த்து டன் ஒன்றுக்கு ரூ.3365 கிடைக்கும் என திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியர் ஜெ.மலா்விழி தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றைக்கு மழை வர வாய்ப்புள்ளதா என கமென்ட் செய்யுங்கள்.

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே ராணிப்பேட்டையில் உள்ள 3,45,532 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம். ஷேர் செய்யவும்.

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களளில் பணி புரியும் 45 காவல் ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி சரோஜ் குமார் தாக்கூர் நேற்று வெளியிட்டுள்ளார். ,மேலும், அந்ததந்த மாவட்ட எஸ்பி-க்கள் மாற்றம் பெற்றவர்களுக்கு ஆணையை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 45 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி சரோஜ்குமார் தாகூர் இன்று (ஆகஸ்ட் 3) உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் பெற்ற காவல் ஆய்வாளர்கள் விரைவில் அவர்களுக்கு மாற்றப்பட்ட காவல் நிலையத்தில் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.