Ranipet

News August 7, 2024

அரக்கோணம் மாணவிகள் விடுதியில் ஆட்சியர் ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று அரக்கோணம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் ஆய்வு செய்தார். அங்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக உள்ளதா?, தண்ணீர் வசதி கழிவறை மற்றும் சத்தான உணவு சமைத்து பரிமாறப்படுகிறதா? ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கவும் என்று ஆட்சியர் மாணவிகளிடம் கேட்டுக் கொண்டார்.

News August 7, 2024

ராணிப்பேட்டையில் மழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மேல் வளிமண்ட சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு அரக்கோணம் , ஆற்காடு, வாலாஜா பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

News August 6, 2024

அரக்கோணம்: அரசு ஐடிஐ நேரடி சேர்க்கை கால நீட்டிப்பு

image

அரக்கோணம் அரசு ஐடிஐயில் மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 1 முதல் 16ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இங்கு எலக்ட்ரீசியன், பிட்டர் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. நேரடி சேர்க்கை குறித்த விவரங்களுக்கு 9499055679 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

ராணிப்பேட்டை:வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை?

image

சோளிங்கர் தென் வன்னியர் தெருவை சேர்ந்தவர் ஜீவா. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (24). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஐந்து மற்றும் இரண்டு வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தமிழ்ச்செல்வி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா என்ற கோணத்தில் சோளிங்கர் போலீசார் இன்று விசாரித்து வருகின்றனர்.

News August 6, 2024

சோளிங்கர் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை 

image

சோளிங்கர் நகராட்சியில் 30க்கும் மேற்பட்ட கடை மற்றும் வீட்டு வரி செலுத்தாதவர்களுக்கும்,  தொழில் உரிமம் பெறாதவர்களுக்கும் நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன் தலைமையில் நோட்டீஸ் வழங்கி, வரி கட்டாதவர்கள், உரிமம்  பெறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று எச்சரிக்கை செய்தார். மேலும் குறித்த நாட்களுக்குள் வரி செலுத்தாவிடில் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.

News August 6, 2024

49 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த முன்னேற்பாடு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 49 பகுதிகள் மழையால் அதிகம் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News August 5, 2024

தேசிய கைத்தறி தின விழா அழைப்பிதழ்

image

இன்று, சென்னை முகாம் அலுவலகத்தில் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தியை, கைத்தறி துறை இயக்குநர் அ.சண்முகசுந்தரம் (இ.ஆ.ப), நேரில் சந்தித்து வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற உள்ள தேசிய கைத்தறி தின விழாவிற்கு அழைப்பிதழை வழங்கினார்.

News August 5, 2024

போக்சோ குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நெமிலி தாலுகா மேலேரி கிராமத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் வி.ஏ.ஓ விநாயகமூர்த்தி ஊராட்சி செயலாளர் சிவலிங்கம் கலந்து கொண்டனர் . மாவட்ட சமூக பாதுகாப்பு பணியாளர் பார்த்திபன் கலந்து கொண்டு போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவருக்கும் கிராம மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

News August 5, 2024

ஆன்லைன் மோசடியில் இழந்த பணம் மீட்பு

image

பெல் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர் ஆசிஸ் ஜெயின் என்பவர் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததாக கொடுத்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீஸ் எஸ்பி கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் வழிகாட்டுதலின்படி உதவி ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் ஆன்லைனில் இழந்த ரூ. 1 லட்சத்து 17ஆயிரத்து 905 பணத்தை மீட்டனர். இதையடுத்து ஆசிஸ் ஜெயின் என்பவரிடம் இன்று பணத்தை ஒப்படைத்தனர்.

News August 5, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திங்கள்கிழமை மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டு அறிந்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், நேர்முக உதவியாளர் நிலம் கலைவாணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!