Ranipet

News August 9, 2024

ராணிப்பேட்டை கலெக்டர் சுற்றறிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் மக்கள் இடையே போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு உறுதிமொழி ஆகஸ்ட் 12ஆம் தேதி எடுக்க வேண்டும். போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அந்தந்த வட்டாட்சியர்களுக்கு இன்று சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

News August 9, 2024

ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3511 மாணவர்கள் பயன் 

image

அரசுப் பள்ளியில் 6-12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 42 கல்லூரிகளில் பயிலும் 3511 மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். இதனால் உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

News August 9, 2024

தமிழ் புதல்வன் திட்டத்தின் ஏடிஎம் கார்டு வழங்கும் விழா

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்ட துவக்க விழா நடைபெற்றது .இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ரூ. 1000 பெறுவதற்கான ஏடிஎம் கார்ட்டை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உட்பட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

News August 8, 2024

ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறுகிறது. முகாமில் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், உறுப்பினர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு மனு கொடுத்து தீர்வு காணலாம் என்று ஆட்சிய சந்திர கலா இன்று தெரிவித்துள்ளார்.

News August 8, 2024

ராணிப்பேட்டையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News August 8, 2024

அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் அமைச்சர்

image

வாலாஜா தாலுகா மேல்விஷாரம் தி நேஷனல் வெல்பர் அசோசியேஷன் சார்பில் மேல்விஷாரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.1,75000 மதிப்பிலான உபகரணங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் காந்தி கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனை டாக்டரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் தி நேஷனல் வெல்ஃபேர் அசோசியேசன் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News August 8, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்ட ஆட்சியர்

image

கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெல் நிறுவனத்திற்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக அனுப்பி வைப்பது வழக்கம். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சீலிடப்பட்ட அறையினை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

News August 8, 2024

முதல்வர் கோப்பை போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. 12-19 வயது வரையுள்ள பள்ளி மாணவர்கள், 17-25 வயதுடைய கல்லூரி மாணவர்கள், 15-35 வரையுள்ள பொதுப்பிரிவினர் , அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News August 7, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை சிறப்பு முகாம்

image

அரக்கோணம் அடுத்த மோசூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி, நெமிலி வி.எஸ்.பி திருமண மண்டபம், கூடலூர் ஆதிலட்சுமி திருமண மண்டபம், பன்னியூர் கூட்ரோடு, கஸ்தூரி சதாசிவம் திருமண மண்டபம், கணியனூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அனந்தலை ஊராட்சி சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!