India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலகின் கீழ், கூடுகை மற்றும் கூட்டாண்மை திட்டம் தொடர்பான பணிகளை வட்டாரங்களில் திறம்பட செயல்படுத்த வட்டாரத்திற்கு ஒரு வட்டார வள பயிற்றுனர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தகுதியானவர்கள் விண்ணப்பத்தை ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்குள் ஊரக வாழ்வாதார இயக்கம் ராணிப்பேட்டை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

வாலாஜா தாலுகா ஆயிலம் கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மனுக்கு பொங்கல் இடுதல், கூழ்வார்த்தல் ஸ்ரீ முத்தாலம்மன் 108 பால்குடம் அபிஷேகம் மற்றும் அலகு குத்துதல் விழா இன்று நடைபெற்றது. காலை ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் புறப்பட்டது. அதைத் தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் பால் குடம் சுமந்து வந்து முத்தாலம்மனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை இயக்குனர் பியூஷ்ஆனந்த் மீட்பு படை வீரர்களின் மீட்பு பணிகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார். அதைத் தொடர்ந்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவின் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் பிரதமர் மோடியிடம் வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை இயக்குனர் பியூஷ்ஆனந்த் மீட்பு படை வீரர்களின் மீட்பு பணிகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார். அதைத் தொடர்ந்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவின் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் பிரதமர் மோடியிடம் வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அரக்கோணத்தில் இருந்து தினமும் காலை 7:20 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் வரை மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஆக.12 முதல் ஆக.14 வரை காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோன்று மறு மார்க்கத்தில் வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து அரக்கோணத்திற்கு காலை 10 மணிக்கு இயக்கப்படும் ரயிலானது காட்பாடியில் இருந்து மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே இன்று தெரிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் இடையே ஆக.12,14 ஆகிய தேதிகளில் பகுதி நேரமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 11.10 முதல் 1.10 மணி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வரை காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் திருவள்ளூர் வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி பி ராதாகிருஷ்ணன் சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக இன்று வருகை புரிந்தார். முன்னதாக அவருக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயா மற்றும் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் விஜயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர் .

தமிழ்நாடு தாட்கோ மூலமாக 2023 – 24ஆம் ஆண்டுகளில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்களுக்கு எச்சிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பிஎஸ்சி கம்ப்யூட்டர் டிசைனிங், பிகாம், பி சி ஏ, பி பி ஏ படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு தாட்கோ அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

கலவை தாலுகா பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அங்கு 68.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழை காரணமாக கலவை அடுத்த மாம்பாக்கம் காலனியில் உள்ள மணி – மாலா தம்பதியரின் அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இன்று காலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து வருவாய்த்துறையினர் நேரில் விசாரணை நடத்துகின்றனர்.

வாலாஜா தாலுகா வன்னிவேடு கிராமம் ஜே ஜே நகர் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோயிலில் நேற்று கூழ்வார்த்தல் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. அப்போது முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் படுகாயமடைந்த 11 நபர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.