India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் காலை 11 மணிக்கு அந்தந்த ஊராட்சிகளில் நடத்த வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், கிராம சபை கூட்டத்தில் கிராமங்களில் சுத்தமான குடிநீர், இணைய வழியில் வரி செலுத்துதல், சுற்றுப்புற தூய்மை, சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஒப்பிடும்போது, தமிழகத்தில் இயல்பைவிட 91% அதிக அளவில் மழை பெய்துள்ளது. குறிப்பாக, ராணிப்பேட்டையில் கடந்தாண்டு (ஜூன் – ஆகஸ்ட் ) 22% மழை பெய்த நிலையில், இந்தாண்டு 57% மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில் மழை பெய்கிறதா?

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் சோளிங்கர் பகுதியை சேர்ந்த பச்சைகான்(79) என்பவர் அளித்த மனுவில், கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பித்த போது தான் இறந்துவிட்டதாக பதிவாகியுள்ளதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் அதை சரி செய்யவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், தனக்கு உதவித்தொகை வழங்கமாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழியினை ஏற்றார். இதை தொடர்ந்து திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் பள்ளி மாணவர்களுடன் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கரியா குடல் கிராமம் குட்டை காலனி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கூரை வீட்டின் மண் சுவர் மழையில் ஊறி இன்று பகல் இடிந்து விழுந்தது. இதில் உயிர் சேதம் ஏதுமில்லை. வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் மற்றும் வருவாய் துறை நேரில் விசாரணை நடத்துகின்றனர்.

டாடா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அரக்கோணம் ரயில்வே போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பொதுப்பெட்டியில் ரயிலின் சீட்டுக்கு கீழே கேட்பாரற்றுக் கிடந்த பையை எடுத்து ரயில்வே போலீசார் சோதனை நடத்தியதில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் முதற்கட்டமாக 370 நபர்களுக்கு ரூபாய் 3.50 லட்சம் மதிப்பிட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாஸ் பிரகாஷ், ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்து அத்துறைசார்ந்த அதிகாரிகளை அழைத்து மனுக்களை வழங்கி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று அரக்கோணம், வாலாஜா, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தத்தால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று மழை பெய்யுமா? பெய்யாதா?

சோளிங்கரில் பள்ளி மாணவர்களை அழைத்து வருவதற்காக, ஆயல் கிராமத்தில் இருந்து தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது நாக தங்கள் என்ற இடத்தில் வரும் போது, வேனின் நிலை தடுமாறி சாலை ஓரம் கவிழ்ந்தது. இதில், வேனில் இருந்த 10 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அனைவரும் சோளிங்கர் அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.