India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசுகையில் தூய்மை பணியாளர்கள் மாதத்திற்கு 26 நாட்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். அதற்கு மேல் பணியாற்றும் ஒவ்வொரு நாட்களுக்கும் இரண்டு நாட்கள் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஆட்சியர் சந்திரகலா உடன் இருந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( மார்ச் -8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
ராணிப்பேட்டை சந்தை மேடு பகுதியில் புத்தக திருவிழாவில் பொதுமக்கள் புத்தக ஆர்வலர்கள் மாணவர்கள் வருகை புரிந்து புத்தகங்கள் வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வேண்டுகோள். பிப்- 28 அன்று முதல் மார்ச் 6 வரையில் கடந்த 7 நாட்களில் 18,494 மாணாக்கர்களும், 8,630 பொதுமக்களும் புத்தக கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். ரூ. 20,85,884 மதிப்பீட்டிலான நூல்கள் விற்கப்பட்டன என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அளித்த பேட்டியில் பா.ஜ., போஸ்டர்கள் அனைத்தும் பிரதமர், தேசிய தலைவர், மாநில தலைவர் படங்கள் என்ற ‘புரோட்டோகால்’ உடன் தான் அச்சிடப்பட்டிருக்கும். எங்கள் வாதங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் தான் இப்படி போஸ்டர் அச்சிட்டு ஒட்டியுள்ளனர். ராணிப்பேட்டையில் சந்தானபாரதி படத்துடன் போஸ்டர் அச்சிட்டு ஒட்டியவர்களை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ரெண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்கிற சீனு இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு அவரது நிலத்துக்கு செல்லும் வழியில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது இன்று காலை தெரிந்தது. இது குறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்கள்
மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்.
மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் அமைத்திருக்கிறது காஞ்சனகிரி மலை. ராணிப்பேட்டை நகரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில்,7 கொண்டை ஊசி வளைவுகளையும்,மலை உச்சியில் சுமார் 60 ஏக்கர் சமவெளி பரப்பு,இயற்கை எழில் கொஞ்சும் காஞ்சனகிரி மலையை மாவட்டத்தின் சுற்றுலாத்தலமாகவும், அரசு கோடைவிழா நடைபெறும் மலை வாசஸ்தலமாகவும் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( மார்ச் -7 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.
Sorry, no posts matched your criteria.