India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மக்களே, நெடுஞ்சாலையில் நாம் உபயோகிக்கும் கழிவறைகள் பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் நிலைதான். இதைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லையெனில், அதனை புகைப்படம் எடுத்து,<

வாலாஜா அருகே, IT ஊழியர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியள்ளது. காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுரேந்தர்(32) இவரது மகன் யாஷோ(6) பிறந்ததில் இருந்து மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்பதால், மனஉளைச்சலில் மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். ‘என் மகனின் நிலைதான் இதற்கு காரணம்’ என கடிதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அக்.16 இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., இன்று (அக்.15) கோடம்பாக்கம் ஊராட்சியிலுள்ள கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்கள். இச்சங்கத்தில் வழங்கப்பட்ட விவசாய கடன், நகை கடன், தனிநபர் கடன் குறித்த பதிவேடுகளையும், கடன் வசூலிக்கப்பட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்கள்.

இராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா இன்று (அக்.15) காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கர்ணாவூர் ஊராட்சி வேடந்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவியர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நட்டார்கள். உடன் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன், முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா (பொறுப்பு), மாவட்ட கல்வி அலுவலர் கிளாடி சுகுணா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம் கலந்து கொண்டனர்.

இன்று (அக் -15) ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 172.2மி.மீ மழை பதிவாகியுள்ளது இதில் அதிகபட்சமாக வாலாஜா சுற்றுவட்டார பகுதிகளில் 43.4மி.மீ மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் சராசரியாக 16.11மி. மீ மழை பதிவாகியுள்ளது என்று ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் செய்தியை வெளியிட்டுள்ளது.

ராணிப்பேட்டை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று அக்டோபர் 15ஆம் தேதி இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம் . ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்கங்க.
Sorry, no posts matched your criteria.