India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என நேற்று(மார்ச் 21) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக வழக்கறிஞர் கே.பாலு அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு, புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவின் ஒப்புதல் பெற்ற பிறகே வாக்கு சேகரிக்க சமூக வலைத்தளம், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார். விதிகளை மீறி விளம்பரங்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்கு என்னும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் பணிகளை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆற்காடு பகுதியில் உள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் பார்வதி சிவன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள்(85 வயதிற்கு மேற்பட்ட) மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ராணிப்பேட்டை மாவட்ட பாதுகாப்பு பணியில் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ள முன்னாள் தேசியப்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு வேலூரில் உள்ள முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04162-977432 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
அதிமுக அரக்கோணம் மக்களவை தொகுதி வேட்பாளராக A.L.விஜயன் அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து நேற்று(மார்ச் 20) ராணிப்பேட்டை, முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே ராணிப்பேட்டை நகர அதிமுகவினர் நகர செயலாளர் சந்தோஷம் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்கு பதிவை உறுதி செய்யும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு படிவம் 12டி வழங்கப்பட்டுள்ளதாகவும், பூர்த்தி செய்த படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வரும் மார்ச் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் வளர்மதி நேற்று தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் திமுக மக்களவை தொகுதி வேட்பாளராக ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.