India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சோளிங்கர் தாலுகா ஜம்புகுளம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் தாழ்வான உயரத்தில் மின் வயர்கள் சென்ற நிலையில் இன்று பலமாக காற்று வீசியது. இதில் மின்வயர்கள் கரும்பு தோட்டத்தில் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலின் பேரில் சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டுக்குட்பட்ட பா.உ.சண்முகம் தெருவில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று புதிய தார் சாலை மற்றும் புதிய மின் விளக்குகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய தார் சாலை திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அரக்கோணம் நகர மன்ற உறுப்பினர் நரசிம்மன் கலந்துகொண்டு சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் 16,18ம் தேதி மதியம் 12 முதல் 2மணி வரையிலான ரயில் சேவைகளில் பகுதி ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு காலை 10 மணி மற்றும் 11.45 மணிக்கு புறப்படும் ரயில் இரு நாட்களும் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா வெளியிட்ட செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை கல்லூரி மாணவர்களுக்கான கபடி போட்டிகள் மற்றும் பொது பிரிவினர் ஆண்களுக்கான கபடி போட்டிகள் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி பாணாவரத்திற்கு மாற்றபட்டது.23-ம் தேதி நடைப்பெறவிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் 21-ம் தேதியும் , 21-ம் தேதி நடைபெறவிருந்த கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 23-ம் தேதியும் மாற்றப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ராணிப்பேட்டை ஆர்.காந்தி இன்று (14.09.2024) காவேரிப்பாக்கம் விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் வசிக்கும் 164 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை கபாடி போட்டிகள் 16ம் தேதி பெல் ஆர்.சி மைதானத்திலும், பொது பிரிவினர் ஆண்களுக்கான கபாடி போட்டி ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலை பள்ளியில் 19ம் தேதி நடைபெற இருந்தது. இப்போட்டிகள் பாணாவரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாற்றப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 8:30 மணியளவில் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாநில வாணிப கழகத்தின் டாஸ்மார்க் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உணவகங்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மிலாடி நபி என்பதால் மதுபான கடைகளை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர்கள் திருமால் (ராணிப்பேட்டை உட்கோட்டம்) மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் குரூப் 2 தேர்வுகள் இன்று 43 இடங்களில் நடைபெற்றது. 10,987 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர் . இதில் 8392 பேர் மட்டும் தேர்வு எழுத வந்திருந்தனர். 2595 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு எவ்வித பிரச்சனையும் இன்றி தேர்வு நடக்க வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்

டாட்டா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அரக்கோணம் வந்தபோது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயிலின் பொதுப்பெட்டியில் ஏறி திடீர் சோதனை நடத்தினர் . அப்போது ரயிலின் சீட்டுக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை சோதனையிட்டதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. கஞ்சாவை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Sorry, no posts matched your criteria.