Ranipet

News March 12, 2025

3ஆவது நாளாக குடும்பத்தினருடன் போராட்டம்

image

இச்சிப்புத்தூரில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து பந்தல் அமைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News March 12, 2025

சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர்

image

ராணிப்பேட்டை நகராட்சி வார்டு எண் 16 சீயோன் நகர் கூட்ஸ்செட் சாலை 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை இன்று அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, நகராட்சி தலைவர் சுஜாதா வினோத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 12, 2025

Mobile App Developer பணிக்கு இலவச படிப்பு

image

தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் <>வேலை கிடைக்கும்.<<>>

News March 12, 2025

விவசாயி கொலை வழக்கில் 8 பேர் கைது

image

சோளிங்கர் அருகே விவசாயி கொலை வழக்கில் 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சோளிங்கர் அடுத்த ரெண்டு அடியில் ஞாயிற்றுக்கிழமை சீனிவாசன்(50) எனும் விவசாயி மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இவர் மீது குற்ற வழக்குகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அரக்கோணம் டிஎஸ்பி ஜாஃபர் சித்திக் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படை திங்கட்கிழமை துப்பு துலக்கி 8 பேரை கைது செய்தது.

News March 12, 2025

குட்கா, புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைக்கு உட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை போன்ற  பொருட்களை விற்பனை செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் போலீசார் தலைமையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News March 11, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( மார்ச் -11 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News March 11, 2025

ராணிப்பேட்டை குறைதீர் கூட்டத்தில் 384 மனுக்கள்

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயு. சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தார். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 384 மனுக்கள் வரப்பெற்றன. பெற்றுக்கொண்ட மனுக்களை துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

News March 11, 2025

தொழிலாளர்கள் போராட்டம்: எம்எல்ஏ ஆதரவு

image

இச்சிப்புத்தூரில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையில் வைத்து இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ ரவி ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது அதிமுக ஒன்றிய செயலாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 11, 2025

தமிழ் தெரிந்தால் அரசு வேலை! நாளையே கடைசி நாள்

image

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து உடனே விண்ணப்பியுங்கள்

News March 11, 2025

பைக் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

image

ஈசலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் (19). இவர் நேற்று இரவு பைக்கில் எஸ்.ஆர் கண்டிகை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் உயிரிழந்தார். அவரது உடலை அரக்கோணம் தாலுகா போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!