India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அரக்கோணம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் பதிவேடுகளையும் மாவட்ட எஸ்பி இன்று ஆய்வு செய்தார். மேலும் இந்த ஆய்வில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் நேற்று (18.09.2024) ஆற்காடு வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாமில் ஆற்காடு அரசு கண் மருந்துவமனையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் வட்டாட்சியர் பாக்கியலட்சுமி, மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவசங்கரி உள்ளனர்.

டாட்டா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் அரக்கோணம் ரயில்வே போலீசார் இணைந்து நேற்று சோதனை நடத்தியதில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 10 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சாவை கடத்தியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்தார் இதில் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர் மேலும் தேர்தல் பிரிவு துணை ஆட்சியர் மற்றும் அந்தந்த துணை வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்யப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்தார்.

ராணிப்பேட்டையில் இன்று (19.9.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு என்று மின்சார வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் நேற்று இரவு திடீரென்று அறிக்கை வெளியிட்டது அதில் 19.9.24 மின்வெட்டு என்று அறிவித்த நிலையில் துணை மின் நிலையங்களில் சில காரணங்களால் இன்று அறிவித்த மின் வெட்டு ரத்து செய்து மின்சாரம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு மற்றும் பயற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் 1 வரை ராணிப்பேட்டை பழைய BSNL அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தகுதியுடைய வேலைநாடுநர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஷேர் செய்யவும்

ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆற்காடு வட்டத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் மழை பெய்தால் பகிரவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 18) 100.7°F பாரன்ஹீட் வெயில் பதிவானது. கடந்த வாரத்தில் 95 டிகிரியாக இருந்த வெயில் தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

நெமிலி மேற்கு ஒன்றியம், ரெட்டிவலம் கிராமத்தில் இன்று ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் 470 ஏக்கர் பரப்பளவில் 9000 கோடி மதிப்பில் டாடா கார் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தருகிறார். முதல்வரை வரவேற்பது குறித்து மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Sorry, no posts matched your criteria.