Ranipet

News September 21, 2024

அரக்கோணம் ஆர்டிஓ பணியிட மாற்றம்

image

அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியராக பாத்திமா பணியாற்றி வருகிறார். இவர் சென்னை சேப்பாக்கம் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் முகாம் தனித்துணை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்து அரசின் முதன்மை செயலாளர் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். அதேநேரம் அரக்கோணம் புதிய வருவாய் கோட்டாட்சியர் யார் என்று இதுவரை தகவல் தெரிவிக்கப்படவில்லை.

News September 21, 2024

அரக்கோணம் எம்எல்ஏ எச்சரிக்கை

image

அரக்கோணம் எம் எல் ஏ ரவி இன்று விடுத்துள்ள அறிக்கையில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சாலை பணிகளுக்காக நெடுஞ்சாலை துறைக்கு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யும் இந்த ஆண்டு 35 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.அரக்கோணம் தொகுதி சாலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.வழக்கம்போல் சாலை விரிவாக்க பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால் அரக்கோணம் நெடுஞ்சாலைத்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம் நடக்கும் என தெரிவித்துள்ளார்

News September 21, 2024

ராணிப்பேட்டையில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 11 மணி முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ராணிப்பேட்டை இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 21, 2024

420 சிஐஎஸ்எப் வீரர்களுக்கு பயிற்சி நிறைவு விழா

image

அரக்கோணம் அடுத்த தக்கோலம் நகரி குப்பத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையம் இயங்கி வருகிறது இங்கு உதவி சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் 420 பேருக்கான பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது விமான நிலையங்களின் தென் மண்டல ஐஜி ஜோஸ் மோகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார் பயிற்சியின்போது சிறந்து விளங்கியவர்களுக்கு அவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார் .

News September 21, 2024

ராணிப்பேட்டையில் இன்றைய காய்கறி நிலவரம்

image

பெங்களூரு தக்காளி கிலோ ரூ.40, பீன்ஸ் ரூ.80, பீட்ரூட் ரூ.45, பாகற்காய் ரூ.60, சுரைக்காய் ரூ.20, கத்திரிக்காய் ரூ.40, அவரைக்காய் ரூ.45, முட்டைக்கோசு ரூ.25, குடைமிளகாய் ரூ.55, கேரட் ரூ.50, காலிஃப்ளவர் ஒன்று ரூ.45, வெங்காயம் ரூ.25, வெண்டைக்காய் ரூ.35, சின்ன வெங்காயம் ரூ.70, உருளைக்கிழங்கு ரூ.20, முள்ளங்கி ரூ.30, கோவக்காய் ரூ.25, முருங்கைக்காய் ரூ.60, கருணை ரூ.75, தேங்காய் ஒன்று ரூ.40, இஞ்சி ரூ.240.

News September 20, 2024

ராணிப்பேட்டையில் மழை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. முதலில் சாரல் மழையாக இருந்தது பின்னர் பலத்த மழையாக மாறியது. இன்று இரவு 8.30 மணி அளவில் வாலாஜா, ஆற்காடு, அம்மூர், சிப்காட், காவேரிப்பாக்கம், சோளிங்கர், மேல்விஷாரம், பனப்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News September 20, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.

News September 20, 2024

ராணிபேட்டை எஸ்பி பாராட்டு சான்றிதழ் வழங்கல்

image

கலவை வட்ட ஆய்வாளர் கவிதா மற்றும் போலீசார் தலைமையில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய 3 நபர்களை 17ஆம் தேதி கைது செய்து அவர்களிடமிருந்து 28 சவரன் தங்க நகைகள் மற்றும் 1.25 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று இதில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்களை அழைத்து மாவட்ட காவல் எஸ்.பி. கிரண் ஸ்ருதி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

News September 20, 2024

ராணிப்பேட்டையில் படித்த இளைஞர்களை ஆட்சியர் அழைப்பு

image

தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு திட்டத்தின் கீழ்
நடப்பாண்டு 21 நபர்களுக்கு ரூ.2 கோடியே 40 லட்சத்து 57 ஆயிரம் கடன் உதவிகளை வழங்க இலக்கீடாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு முதல் தலைமுறை தொழில் முனைவோர் 16 நபர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கபட உள்ளது. இதை படித்த இளைஞர்கள் மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை பெற்று பயனடைய வேண்டும் என ஆட்சியர் அழைப்பு

News September 19, 2024

அதிகாரிகளுக்கு எஸ்பி பாராட்டு

image

ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.8,000 அபராதம் விதித்து ராணிப்பேட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்பி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

error: Content is protected !!