Ranipet

News September 24, 2024

ராணிப்பேட்டை மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (23.9.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் கவர்ந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.
கண்ட்ரோல் ரூம் : 9884098100

News September 24, 2024

சைகை மொழி குறித்து விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேச காது கேளாதோர் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தையொட்டி காது கேளாத மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலங்களுக்கு சென்று தங்களது கோரிக்கைகளை சைகை மொழியில் தெரிவிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் துறைசார்ந்த அரசு அலுவலர்களுக்கு சைகை மொழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News September 23, 2024

ராணிப்பேட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

image

இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகிலுள்ள சிப்காட் தொழில்பேட்டையில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்ட தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, இன்று வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் தேவராணி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்

News September 23, 2024

ராணிப்பேட்டையில் அப்செட்டான அமைச்சர்

image

ராணிப்பேட்டை மாவட்டம் அக்ராவரம் பகுதியில் வாலாஜா மேற்கு ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன், திமுக வெற்றி பெற்றாலும் கூட பல தொகுதிகளில் கட்சி முறையாக வளரவில்லை.வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

News September 23, 2024

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு பயிற்சி வகுப்பு

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ராணிப்பேட்டையில் SI மற்றும் 2ஆம் நிலை காவலர் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்த வகுப்பில் சேர விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் செப்.30க்குள் https://forms.gle/U6jezR4ErRVZ1t1x8 இந்த Link ல் Google form ஐ பூர்த்தி செய்து அனுப்புமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 23, 2024

ராணிப்பேட்டை: இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

அரக்கோணம் கோட்டத்தைச் சேர்ந்த மோசூர், அரக்கோணம் டவுன், விண்டர்பேட்டை ஆகிய 3 துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின்சாதன பராமரிப்பு பணிகள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இன்று (செப்.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரக்கோணம், மோசூர், கீழ்பாக்கம், நகரிக்குப்பம், ஆணைப்பாக்கம் , அம்பரிஷிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மின்தடை செய்யப்படும் என்று கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News September 22, 2024

சிறுதானியங்கள் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி

image

அரக்கோணம் வட்டம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நாளை 23 /9/ 2024 அன்று விவசாயிகளுக்கான உள் மாநில அளவிலான கண்டுணர்வு பயண பயிற்சிக்காக 50 க்கு மேற்பட்ட விவசாயிகளை திருவண்ணாமலை மாவட்டம் அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்திற்கு விவசாயிகளை அழைத்துச் செல்கிறார்கள். இதில் ஆர்வம் உள்ள விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு அரக்கோணம் வேளாண்மை உதவி இயக்குனர் அனுராதா தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News September 22, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ( 7 மணி வரை) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியால மழையா? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 22, 2024

ராணிப்பேட்டை அருகே நாளை மின்தடை

image

அரக்கோணம் கோட்டத்தைச் சேர்ந்த மோசூர், அரக்கோணம் டவுன், விண்டர்பேட்டை ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை செப்டம்பர் 23ஆம் தேதி நடக்கிறது . இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரக்கோணம் மோசூர், கீழ்பாக்கம், நகரிக்குப்பம், ஆணைப்பாக்கம் , அம்பரிஷிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்

News September 22, 2024

ராணிப்பேட்டையில் விடிய விடிய மழை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா, ராணிப்பேட்டை, சோளிங்கர், ஆற்காடு, மேல்விஷாரம் காவேரிப்பாக்கம் பனப்பாக்கம் நெமிலி போன்ற பகுதிகளில் இரவு முழுவதும் லேசான பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு சில இடங்களில் மிதமான மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருக்கிறது.

error: Content is protected !!