India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கம் சிப்காட் பகுதியில் டாடா மோட்டார் தொழிற்சாலைக்கு நாளை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இதனால், முதல்வர் வரிகையையொட்டி, 2 டிஜிபிக்கள், 4 எஸ்பிக்கள், 17 ஏடிஎஸ்பிக்கள், 34 இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஆயிரத்து 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதனையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் தடை செய்யப்பட்ட மாவட்டமாக காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாய பணி, பானை செய்வதற்கு ஏரிகளில் இருந்து களிமண், வண்டல் மண் இலவசமாக எடுக்க விவசாயி, மண்பாண்ட தொழிலாளர், மக்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று நீர் நிலைகளின் கட்டுப்பாட்டு அலுவலகர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ராணிப்பேட்டையில் TNPSC GROUP 2 MAINS பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் செப்.30க்குள் https://forms.gle/iBtC9MyGSB1NfnZH8 என்ற Link-ல் google form-ஐ பூர்த்தி செய்து அனுப்புமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (26.9.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூம் (9884098100) என்ற எண்ணிற்கும் அழைக்கலாம்.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் 470 ஏக்கர் பரப்பளவில் டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலைக்கு வரும் 28ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில் 28ஆம் தேதி அனைத்து வருவாய் சார் நிலை அலுவலர்கள் விடுப்பு ஏதும் இன்றி தலைமையிடத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆட்சியர் சந்திரகலாவுக்காக அலுவலக மேலாளர் விஜயராகவன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெங்களூரு தக்காளி கிலோ ரூ.25 , பீன்ஸ் ரூ.80 , பீட்ரூட் ரூ.45 , பாகற்காய் ரூ.60 , சுரைக்காய் ரூ.20, கத்திரிக்காய் ரூ.40, அவரைக்காய் ரூ40, முட்டைக்கோசு ரூ.25 , குடைமிளகாய் ரூ 50 கேரட் ரூ 40, காலிஃப்ளவர் ஒன்று ரூ 45, வெங்காயம் ரூ 25, வெண்டைக்காய் ரூ 30 சின்ன வெங்காயம் ரூ 70 உருளைக்கிழங்கு ரூ.40 முள்ளங்கி ரூ 30, கோவக்காய் ரூ 25, முருங்கைக்காய் ரூ 60, தேங்காய் ஒன்று ரூ.30 விற்பனை செய்யப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (25.9.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கண்ட்ரோல் ரூமிற்கு அழைக்கலாம் (9884098100).

ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் குழுக்களில் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் கல்லூரி சந்தை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் ரயில்வே இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் போலீசார் இன்று காலை ஆந்திர மாநிலம் கடப்பா, திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் சோதனை நடத்தினர். அப்போது ரயிலின் இருக்கை கீழே பதுக்கி வைத்திருந்த 200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இந்த அரிசி மூட்டைகளை அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் முத்துக்குமாரனிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
Sorry, no posts matched your criteria.