Ranipet

News April 28, 2024

ஆன்லைன் ரம்மி- ஒருவர் தற்கொலை 

image

திருவள்ளூர், திருத்தணி பெரியார் நகர் பால்வாடி தெருவை சேர்ந்தவர் ராமு(38). இவர் அரக்கோணம் பழனிபேட்டையில் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் செல்போனில் ஆன்லைன் ரம்மி ஆடியதில் பல லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்த நிலையில், இன்று விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

News April 27, 2024

ட்ரோன்கள் பறக்க தடை

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரக்கோணம் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாலாஜா AAA கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மையத்திலிருந்து சுமார் 3கி மீ சுற்றளவு வரை ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் வாக்கு எண்ணும் நாட்கள் (04.06.2024) வரை பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

News April 27, 2024

ராணிப்பேட்டை: வெள்ளி பொருட்கள் ஒப்படைப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அகஸ்தியாபுரத்தை சேர்ந்த பொன்ராஜ் காசி தமிழ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது, கடலூர் ரயில் நிலையம் அருகே வெள்ளி பொருட்கள் அடங்கிய பையை தவறவிட்டார். இந்நிலையில் அரக்கோணம் வந்த காசி எக்ஸ்பிரஸ் ரயிலில் பொன்ராஜ் தவறவிட்ட அரை கிலோ வெள்ளி பொருட்களை மீட்ட அதிகாரிகள் இன்று(ஏப்.27) பொன்ராஜ் குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.

News April 27, 2024

அரக்கோணம்: புதுமண தம்பதியிடம் 20 பவுன் திருட்டு

image

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிவண்ணன்(33). இவருக்கு ஏப்.23ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று(ஏப்.26) மனைவி மற்றும் குடும்பத்தாருடன் காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயிலின் ரிசர்வ் பெட்டியில் அரக்கோணம் வந்து கொண்டிருந்தார். அப்போது, 20 பவுன் நகை, ரொக்கம் ரூ.10,000 வைத்திருந்த பை திருடுபோனது. இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 27, 2024

வாலாஜா அருகே அதிமுக சார்பில் நீர், மேர் பந்தல்

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் நகர அதிமுக செயலாளர் W.G.மோகன் மற்றும் பெல்லியப்பா நகரில், ஒன்றிய செயலாளர் பூண்டி பிரகாஷ் ஆகியோர் தலைமையில் 2 இடங்களில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர், மோர், தண்ணீர் பந்தலை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் நேற்று(ஏப்.26) திறந்து வைத்தார்.

News April 26, 2024

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே உஷார்

image

மே 1 முதல் 4 வரை தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலையானது உச்சத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

News April 26, 2024

ராணிப்பேட்டை: ஆடுகளுக்கு தடுப்பூசி – கலெக்டர் அறிவிப்பு

image

ராணிப்பேட்டை முழுவதும் 1.54 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் வளர்மதி இன்று(ஏப்.26) தெரிவித்துள்ளார். செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் பரவுவதை தடுக்க வரும் 29ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு மாவட்டம் முழுவதும் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. 4 மாதத்திற்கு குறைவான குட்டிகள் மற்றும் சினையுற்ற ஆடுகளுக்கு இந்த தடுப்பூசி போடக்கூடாது.

News April 26, 2024

நெமிலி: நேருக்கு நேர் மோதி 3 பேர் படுகாயம்

image

நெமிலி தாலுகா பன்னியூர் கிராமத்தை சேர்ந்த ஜலகண்டன், சதீஷ்குமார், உதயகுமார் ஆகிய 3 பேரும் ஒரே பைக்கில் நேற்று(ஏப்.25) இரவு வாலாஜா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பன்னீர் கூட்ரோடு அருகில் செல்லும்போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 3 பேரும் படுகாயம் அடைந்து 108 ஆம்புலன்ஸில் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாணாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 26, 2024

சோளிங்கர்: ஊருக்குள் வந்த புள்ளி மான்

image

சோளிங்கர் தாலுகா போளிப்பாக்கம் கிராமம் அருகே பாணாவரம் காப்பு காட்டில் இருந்து புள்ளிமான் ஒன்று இன்று காலை ஊருக்குள் ஓடி வந்தது. பொதுமக்கள் புள்ளிமானை பாதுகாப்பாக பிடித்து கட்டிவைத்தனர் . பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புள்ளி மானை மீண்டும் பாணாவரம் காப்புக்காட்டில் விடுவதற்கு ஏற்பாடு செய்தனர்.

News April 26, 2024

ராணிப்பேட்டை அருகே லாரி கவிழ்ந்து விபத்து

image

காஞ்சிபுரத்திலிருந்து இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு, அரக்கோணம் நோக்கி இன்று(ஏப்.26) காலை லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. பரமேஸ்வர மங்கலம் அருகே வரும்போது நிலை தடுமாறிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பின்னால் வந்த காரும் லாரியின் பின்பக்கம் மோதி விபத்தில் சிக்கியது. இதில் 2 பேர் லேசான காயமடைந்தனர். தக்கோலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!