India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நல அலுவலர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் 13 விடுதிகள் உள்ளன. இந்நிலையில் இதில் சேர விரும்பும் மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையொட்டி ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள், நகர ஒன்றிய பேரூர் செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை ராணிப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இராணிப்பேட்டை உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் – 5,63,216 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் ஏ. எல். விஜயன்- 2,56,657 வாக்குகள்
*பாமக வேட்பாளர் கே. பாலு – 2,02,325 வாக்குகள்
*நாதக வேட்பாளர் அஃப்சியா நஸ்ரின்- 98,944 வாக்குகள்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆட்சியர் வளர்மதி மரக்கன்றுகள் நட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி, மாவட்ட வன அலுவலர் குரு சுவாமி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ள குருப்4 தேர்வினை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 121 மையங்களில் 32970 பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8 மணி முதல் 9 மணிக்குள் வந்துவிட வேண்டும். 9 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்பு வரவேண்டுமென கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் மக்களவை தொகுதியில் ஜெகத்ரட்சகன் மீண்டும் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையமான வாலாஜா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.பி ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி இன்று வழங்கினார். உடன் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் கடந்த 1999 ம் ஆண்டு, 2009ம் ஆண்டு , 2019ம் ஆண்டு திமுக வேட்பாளராக டாக்டர் எஸ் ஜெகத்ரட்சகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் 2024 மக்களவை பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டு 3,06, 599 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் 4 வது முறையாக ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்று எம் பி ஆனது திமுகவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 5,48,307 வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். அதிமுக 2,49,051 வாக்குகளும், பாமக 1,96,846 வாக்குகளும், நாதக 96,058 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பெற்று வெற்றியை நழுவ விட்டனர்.
Sorry, no posts matched your criteria.