Ranipet

News March 13, 2025

ராணிப்பேட்டையில் கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் அனைத்து பணியாளர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நாளை (மார்ச் 14) நடைபெற உள்ளதாக இணை பதிவாளர் மலர்விழி தெரிவித்துள்ளார். நாளை காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் 3 தளத்தில் உள்ள இணை பதிவாளர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, பணி தொடர்பாகவும், பணியின் போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடர்பாக மனுக்களை அளிக்கலாம்.

News March 13, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக சமூக வலைதளத்தில் இன்று (மார்ச் 13) வெளியிட்டுள்ள செய்தியில் போலியான வங்கி செய்திகளைக் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள், உங்கள் வங்கிக் கணக்குகளை யாரிடமும் பகிர வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதவிக்கு சைபர் கிரைம் 1930 அழைக்கவும்.

News March 13, 2025

சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறைதீர் நாள் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகளுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மக்கள் குறைதீர் கூட்ட அரங்கத்தில் வரும் 17ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் நடைபெறுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அவர்தான் வாரிசுகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

News March 13, 2025

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். 15ஆம் தேதிக்குள் <>விண்ணப்பியுங்கள்<<>>.

News March 13, 2025

ரயிலில் பெண் தவறவிட்ட 25 சவரன் நகை மீட்பு

image

காஞ்சிபுரம் வழியாக அரக்கோணத்திற்கு நேற்று (மார்.12) இரவு மின்சார ரயிலில் வந்த பெண் ஒருவர், தனது பையை ரயிலில் தவறவிட்டார். அதில் விலை உயர்ந்த நகைகள் இருப்பதாக புகார் அளித்தார். அதன்பேரில், அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், தீவிரமாக செயல்பட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். பின்னர், அரக்கோணத்திற்கு வந்த மின்சார ரயிலை சோதனை செய்து பையை கண்டு பிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர். 

News March 13, 2025

ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு

image

முகுந்தாயபுரம் பெல் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (61). இவர், நேற்று (மார்.12) முகுந்தராயபுரம் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 13, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( மார்ச் 12 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News March 12, 2025

2 கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதிப்பு

image

சோளிங்கர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவுக்கு புகார் சென்றது. அதை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுதாகர் மற்றும் போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். அதில் குட்கா விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு தலா ரூபாய் 25000 அபராதம் விதிக்கப்பட்டது.

News March 12, 2025

ராணிப்பேட்டை: மத்திய அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு

image

மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகம் அற்றவர்கள், அநாகரிகமானவர்கள் போல நடந்து கொள்வதாக கூறியிருந்தார். அதைக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆணைக்கு இணங்க சோளிங்கர் நகர திமுக கட்சியினர் மத்திய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து கண்டனத்தை பதிவு செய்தனர்.

News March 12, 2025

3ஆவது நாளாக குடும்பத்தினருடன் போராட்டம்

image

இச்சிப்புத்தூரில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து பந்தல் அமைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!