Ranipet

News June 12, 2024

பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது ஏல சீட்டு மோசடி, இட தகராறு, சைபர் கிரைம் உள்ளிட்ட குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கிரண்ஸ்ருதி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

News June 12, 2024

கலவை அருகே விபத்தில் உயிரிழந்த நபர்

image

கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கலங்கல் ஓடை தெருவை சேர்ந்தவர் கமல். இவர் நேற்று(ஜூன் 11) இரவு பைக்கில் வாழைப்பந்தல் சென்றுவிட்டு மாம்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மேலப்பழந்தை பகுதியில் வந்தபோது நிலைத்தடுமாறி அருகில் இருந்த சுவற்றின் மீது மோதி விபத்தில் சிக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்து கமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News June 12, 2024

ராணிப்பேட்டை: திமுக செயற்குழு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் (பாரதி நகர் மாவட்ட கழக அலு­வ­ல­கத்­தில்) மாவட்ட அவைத் தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆர்.காந்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் ஆர்.வினோத் காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News June 11, 2024

கிராம உதவியாளர்கள் 6 பேர் பணியிட மாற்றம்

image

நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட காட்டுப்பாக்கம் கிராம உதவியாளர் தமீம்அன்சாரி நெல்வாய்க்கும், அங்கு பணியாற்றி வந்த வசந்தி மேலப்புலத்துக்கும், ஓச்சேரி சதீஷ்குமார் கட்டளைக்கும், அங்கு பணியாற்றி வந்த ஜெயபூரணி ஓச்சேரிக்கும், உளியநல்லூர் சங்கீதா துறையூருக்கும், அங்கு பணியாற்றி வந்த பிரபாகரன் காட்டுப்பாக்கத்திற்கும் பணியிட மாறுதல் செய்து நெமிலி வட்டாட்சியர் பாலச்சந்தர் உத்தரவு பிறப்பித்தார்.

News June 11, 2024

அரசு பள்ளி கட்டிடம் திறப்பு

image

அரக்கோணம் அம்பேத்கர் நகரில் நகராட்சி பொது கல்வி நிதி ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் நடுநிலைப்பள்ளிக்கு புதிதாக 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நகராட்சி ஆணையாளர் ரகுராமன், நகராட்சி துணைத் தலைவர் கலாவதி, கவுன்சிலர் மாலின், பள்ளி தலைமை ஆசிரியர் கீதா கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி செயலாளர் லட்சுமி புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

News June 11, 2024

கலவை: மின்கம்பத்தில் பைக் மோதி இளைஞர் பலி

image

கலவை தாலுகா மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கமல்(23). இவர் தனது பைக்கில் நேற்று இரவு மாம்பாக்கத்தில் இருந்து மேலப்பழந்தை செல்லும்போது சாலையில் இருந்த மின்கம்பத்தில் மோதினார். இந்த விபத்தில் கமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடலை மீட்ட வாழைப்பந்தல் போலீசார் பிரேத பரிசோதனைக்கு செய்யார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News June 11, 2024

ராணிப்பேட்டை: மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்!

image

ராணிப்பேட்டை கலெக்டர் ச.வளர்மதி, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(ஜூன் 10) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளின் நலத்துறையின் மூலம் 3 பேருக்கு நவீன செயற்கை கால் வழங்கினர். இந்நிகழ்வில் சுரேஷ், உதவியாளர்
மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணண் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News June 10, 2024

கலவை அருகே கோவில்களுக்கு கும்பாபிஷேகம்

image

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மேல்நேத்தப்பாக்கம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ விஜயவினாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி, ஸ்ரீ மதுசூதனப்பெருமாள், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் என 5 கோவில்களுக்கு மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News June 10, 2024

பள்ளி மாணவிகளுக்கு ஆதார் முகாம் ஆட்சியர்

image

வாலாஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஊராட்சி மன்ற தலைவர் கோகுல கிருஷ்ணன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர் மாணவர்கள் முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

News June 10, 2024

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் ஆட்சியர்

image

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று(ஜூன் 10) திறக்கப்பட்டது . வாலாஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாட புத்தகங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று வழங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

error: Content is protected !!