India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூன் 21 காலை 10 மணி அளவில் திருநங்கை மற்றும் திரு நம்பிகளுக்கான சிறப்பு முகாமானது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடக்கிறது. திருநங்கைகளுக்கான ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்கிட மாவட்ட சமூக நல அலுவலகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு வழங்கும் மாத உதவித் தொகை வேண்டி விண்ணப்பம் செய்தவர்களில் 5000 பேர் தகுதியுள்ள பயனாளிகள் என அவர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது .ஆனாலும் ஒராண்டிற்கு மேலாகியும் விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் ,முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கவில்லை. எனவே விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ ரவி அறிக்கை விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 வட்ட வழங்கல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதற்கான முகாம் நாளை ஜூன் 15ஆம் தேதி நடக்கிறது. பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
இராணிப்பேட்டை மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் PNS சரவணனின் பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சரை இன்று (ஜூன் 13) நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், பரிசாக புத்தகத்தையும் பெற்றுக் கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், ராணிப்பேட்டையில் போலீசார் இருவரை கைது செய்தனர். அப்போது, தப்பி ஓடிய இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில், சென்னையையில் செந்தில்குமார் என்பவர் தங்களை போலீசாரிடம் சிக்க வைத்துவிட்டு, அவர் கஞ்சா விற்று வருவதாகவும், இதனால் அவரை அச்சுறுத்தும் வகையில் பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் ஏடிஎஸ்பி சரவணன் டிஎஸ்பிக்கள் பிரபு வெங்கடேசன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் முதல் நிலைக்காவலர்கள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
D.V கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில், கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுக்கா பழையபாளையம் காலனி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த குற்றவாளி வடிவேலு(57) என்பவர் இன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் (பொது) விஜயராகவன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை துறைசார்ந்த அலுவலர்கள் எடுத்தனர். உடன் மாவட்ட உதவி ஆணையர் வரதராஜன், சிவராஜ், ஹேண்ட், ஜான் சுகுமார், சாம்ராஜ், நாகப்பன் ராமகிருஷ்ணன் இருந்தனர்.
அரக்கோணத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (26). இவர் நேற்று மாலை அரக்கோணம் முதலாவது நடைமேடையில் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது சென்னையில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், தினேஷ் குமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தவரை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்ததாக தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.