India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெமிலி தாலுகா பனப்பாக்கம் உள் வட்டம் கர்ணாவூர் அடுத்த குப்பக்கல்மேடு கிராமத்தைச் சேர்ந்த கோபால், சிவராமன் ஆகிய இருவரிடம் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நிலுவைத் தொகை செலுத்துமாறு வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் விஏஓ ஆகியோர் இன்று தெரிவித்தனர் . ஜமாபந்தி நடைபெறவிருக்கும் நிலையில் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தொகைகளை வசூலிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆற்காடு அடுத்த வேப்பூரை சேர்ந்த முகமது இக்பாலை அவரது மகன் இம்ரான் கொலை செய்தார். இந்த வழக்கு ராணிப்பேட்டை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி செல்வம் கொலை குற்றம் சாட்டப்பட்ட இம்ரானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபாராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார். வழக்கை திறம்பட விசாரித்த அப்போதைய ஆய்வாளர் விநாயகமூர்த்தியை எஸ் பி கிரண்ஸ்ருதி பாராட்டினார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் இன்று (ஜூன் 15) நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த பயிற்சி அரக்கோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் அமைப்பது குறித்த ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 14) நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். கால்நடை இணை இயக்குனர் கோபி கிருஷ்ணன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கால்நடைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்க பிராணிகள் வதை தடுப்பு சங்கம் அமைக்கப்பட உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திறன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (ஜூன் 14) நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். திறன் பயிற்சி உதவி இயக்குனர் பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன் மற்றும் சிறு குறு தொழில் நிர்வாகத்தை சேர்ந்த சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏற்கனவே பழுதடைந்து தேர்தலுக்கு பயன்படுத்தப்படாமல் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பு செய்வதற்காக அனைத்து அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணியை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி உடன் இருந்தார்.
ராணிப்பேட்டை, வாலாஜா, பில்லியப்பா நகரைச் சேர்ந்தவர் ரகோத்தமன் (54). பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (54), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில், நேற்றிரவு ராஜேந்திரனின் வீட்டில் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன் கட்டையால் தாக்கியதில் ரகோத்தமன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் நெமிலி, சோளிங்கர், ஆற்காடு, வாலாஜா, கலவை, என 6 வட்டாட்சியர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி ஜூன் 21ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது . இது குறித்து அரசிதழில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் குறித்து ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி அனைத்து வட்டாட்சியர் அலுவலர்களுக்கும் தகவல் அளித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூன் 21 காலை 10 மணி அளவில் திருநங்கை மற்றும் திரு நம்பிகளுக்கான சிறப்பு முகாமானது மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடக்கிறது. திருநங்கைகளுக்கான ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்கிட மாவட்ட சமூக நல அலுவலகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு வழங்கும் மாத உதவித் தொகை வேண்டி விண்ணப்பம் செய்தவர்களில் 5000 பேர் தகுதியுள்ள பயனாளிகள் என அவர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது .ஆனாலும் ஒராண்டிற்கு மேலாகியும் விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் ,முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கவில்லை. எனவே விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ ரவி அறிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.