Ranipet

News March 19, 2024

கண்காணிப்பு பணியில் பொதுமக்களும் பங்கு பெறலாம்

image

தேர்தல் கண்காணிப்பு பணியில் பொதுமக்களும் பங்கு பெறலாம் ஓட்டுக்கு பணம் தருதல், சட்டவிரோத போஸ்டர் ஒட்டுதல் போன்ற அனைத்து விதமான தேர்தல் விதிமீறல் புகார்களை, நேரடியாக தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பான புகைப்பட, வீடியோ ஆதாரங்களை “சி விஜில்” ( https://play.google.com/store/apps/details?id=in.nic.eci.cvigil ) என்ற செயலியில் அனுப்பலாம் எல்லாம் மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

ராணிப்பேட்டை எஸ்.பி முக்கிய அறிவிப்பு

image

இராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் மதுவிலக்கு சம்மந்தமாக புகார்களை தெரிவிக்க இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல்
காவல் கட்டுப்பாட்டு அறை கைபேசி எண் 93638 68465-ஐ
தொடர்பு கொண்டும்/Whatsapp மூலமாகவும் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

அரக்கோணத்தில் பாமக போட்டி?

image

பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசிய நிலையில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கெயெழுத்தாகியுள்ளது. இதையடுத்து அரக்கோணத்தில் பாமக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News March 19, 2024

ராணிப்பேட்டை: பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள்?

image

பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதையடுத்து பாமகவிற்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News March 18, 2024

கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் ஆய்வு

image

தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் பெரும் வகையில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையினை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தேர்தல் தொடர்பாக பதிவான புகார்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

News March 18, 2024

ஆற்காடு நகராட்சிக்கு ஆயிரம் பூவரசு மர விதைகள்

image

கலவை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் நடராஜ் நம்மாழ்வார் இயற்கை குழுவின் மூலம் பல்வேறு இயற்கை பணிகளை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பசுமையை மேம்படுத்தும் விதமாக நம்மாழ்வார் இயற்கை குழுவின் மூலம் ஆயிரம் பூவரசு மர விதைகளை ஆற்காடு நகராட்சிக்கு வழங்கினார்.

News March 18, 2024

அரக்கோணம் தொகுதி யாருக்கு?

image

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இந்த தேர்தலில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 18, 2024

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவுறுத்தல்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி கூட்டம் இன்று(மார்ச் 18) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்து பேசினார். அப்போது, வேட்புமனு நாளில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வர வேண்டும். 3 வாகனங்கள் மட்டுமே இருக்க வேண்டும். காலை 11 மணி முதல் 3 மணி வரை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். சனிக்கிழமை அன்றும் மனு தாக்கல் செய்யலாம் என்றார்.

News March 18, 2024

ராணிப்பேட்டை: அத்துமீறிய பாதிரியார் மீது போக்சோ!

image

முத்துக்கடை பகுதியை சேர்ந்த பெர்லின் என்பவர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னுடைய மூத்த மகளிடம் பாதிரியார் ரகுராஜ்குமார் (54) என்பவர் பாலியல் அத்துமீறலில் கொடுத்துள்ளார். ஆதலால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஷாதின் நேற்று(மார்ச் 17) பாதிரியார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளார்.

News March 17, 2024

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவிப்பு

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 1122 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 205 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமான மையங்கள் ஆகவும், 13 வாக்கு சாவடி நிலையங்கள் மிகவும் பதட்டமான மையங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். மேலும் 5346 அலுவலர்கள் தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!