Ranipet

News March 22, 2024

ராணிப்பேட்டை: மீறினால் கடும் நடவடிக்கை!

image

அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவின் ஒப்புதல் பெற்ற பிறகே வாக்கு சேகரிக்க சமூக வலைத்தளம், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார். விதிகளை மீறி விளம்பரங்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

News March 21, 2024

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்கு என்னும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் பணிகளை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News March 21, 2024

ராணிப்பேட்டை: திரளான கூட்டம்

image

ஆற்காடு பகுதியில் உள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவர் பார்வதி சிவன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

News March 21, 2024

ராணிப்பேட்டை: முதியோர்கள் கவனத்திற்கு!

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள்(85 வயதிற்கு மேற்பட்ட) மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 21, 2024

ராணிப்பேட்டை: முன்னாள் தேசியப்படை வீரர்களுக்கு..!

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ராணிப்பேட்டை மாவட்ட பாதுகாப்பு பணியில் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ள முன்னாள் தேசியப்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு வேலூரில் உள்ள முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04162-977432 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

News March 21, 2024

ராணிப்பேட்டையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

image

அதிமுக அரக்கோணம் மக்களவை தொகுதி வேட்பாளராக A.L.விஜயன் அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து நேற்று(மார்ச் 20) ராணிப்பேட்டை, முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே ராணிப்பேட்டை நகர அதிமுகவினர் நகர செயலாளர் சந்தோஷம் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

News March 20, 2024

ராணிப்பேட்டை: 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு

image

நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்கு பதிவை உறுதி செய்யும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு படிவம் 12டி வழங்கப்பட்டுள்ளதாகவும், பூர்த்தி செய்த படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வரும் மார்ச் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் வளர்மதி நேற்று தெரிவித்துள்ளார்.

News March 20, 2024

அரக்கோணம் திமுக வேட்பாளர் இவர்தான்!

image

அரக்கோணம் திமுக மக்களவை தொகுதி வேட்பாளராக ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

News March 20, 2024

அரக்கோணம் அதிமுக வேட்பாளர் இவர்தான்!

image

மக்களவைத் தேர்தல்-2024 தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, அரக்கோணம் தொகுதியில் விஜயன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 20, 2024

இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.

error: Content is protected !!