Ranipet

News March 14, 2025

அரக்கோணம்: அகமதாபாத் செல்லும் ரயில் நேரம் மாற்றம்

image

சென்னை சென்ட்ரலில் இருந்து அகமதாபாத் செல்லும் ரயில் எண் 20953 அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு மாலை 4.48 வருகை தந்து 4.50க்கு புறப்படும். வரும் ஏப்ரல் 20 தேதி முதல் இந்த வாராந்திர ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்கும் ரயில் நேரம் மாற்று அமைக்கப்பட்டு சென்னையில் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு இரவு 11.38 வருகை தந்து 11.40 மணிக்கு புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

News March 14, 2025

வாலாஜாவில் வீட்டு மனை பட்டா வழங்க ஆய்வு

image

வாலாஜா நகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று நேரில் கள ஆய்வு செய்தார். அப்போது எத்தனை ஆண்டுகளாக எத்தனை பேர் குடியிருந்து வருகின்றனர் என்ற விவரங்களை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன் நகராட்சி தலைவர் ஹரிணி தில்லை உடனிருந்தனர்.

News March 14, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக சமூக வலைத்தளத்தில் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அமைதியை முடிவுக்கு கொண்டு வாருங்கள், தண்டனையின்மை முடிவுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு கட்டுங்கள் என்று மாவட்ட காவல்துறை சார்பாக பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. உதவிக்கு 181 அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

News March 14, 2025

வளர்ப்பு நாய் கடித்து வீட்டு உரிமையாளர் பலி

image

நெடும்புலி கிராமம் குயவர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் ரமேஷை கடித்தது. உறவினர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். இந்நிலையில் ரமேஷ் இன்று உயிரிழந்தார். இது குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு விதிகளின்படி நல்லடக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

News March 14, 2025

வயலில் பூச்சி கடித்து பெண் உயிரிழப்பு

image

ராணிப்பேட்டை, சங்கரம்பாடி கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (60). இவர் கடந்த 9ம் தேதி தனது வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது பூச்சி கடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அனால் நேற்று (மார்ச்13) சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி உயிரிழந்தார். காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 14, 2025

அரப்பாக்கத்தில் விபத்தில் இளம் பெண் பலி

image

ராணிப்பேட்டை அரப்பாக்கத்தை சேர்ந்த தனலட்சுமி (22),லத்திகா (20). இருவரும் நேற்று (மார்ச்.13) பிள்ளையார்குப்பம் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த கார் மீது மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.இதனை அடுத்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில்,தனலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 13, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( மார்ச் -13 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் 9884098100.

News March 13, 2025

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News March 13, 2025

ரூ.10.70 லட்சம் மதிப்பீட்டில் பரிசோதனை உபகரணங்கள்

image

திமிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வணக்கம்பாடி ஊராட்சியில் ஏழு கால்நடை மருந்தகங்களுக்கு ரூபாய் 10.70 லட்சம் மதிப்பீட்டில் பரிசோதனை உபகரணங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மருத்துவர்களிடம் இன்று வழங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, ஊராட்சி குழு செயலாளர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர் ராஜி உடன் இருந்தனர்.

News March 13, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் தகவல்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதி திராவிட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிஎஸ்சி, எம்எஸ்சி நர்சிங் பட்டப் படிப்பு, பொதுசெவிலியர் மருத்துவ படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 2 மாத பயிற்சி. விரும்புவோர் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!